என்னும் மூன்று முடையன். தனக்குத் தானே ஒத்ததாய் ஈடும் எடுப்பும் இல்லதாய்க் காணப்படும் விழுமிய அழியாப் பேரின்பம் திருவருளின் திருமேனியாகும். சத்தியின் வடிவம் அரிசி மாவொத்து உள்ளது. அம்மாவினின்றும் பல்வேறு உருவம், சமைப்பார் நினைவிற்கேற்றவாறு அமையும். அதுபோல் திருவருளின்கணின்றும் சிவன் திருவுள்ளத்திற்குத் தக்கவாறு சிறந்துதோன்றும். அதனால் சத்தியின்வடிவு சகளமாகிய வடிவ நிலைக்களத்துத் தோன்றி எழும். எழுந்த சிவனும் சிவையுமாகிய இரண்டும் ஒத்துத் திரண்டு ஆருயிர்கட்குப் பேரின்பத்தினை ஊட்டுவதாக வுவந்தநிலை ஒப்பில் திருநடமாகும். (அ. சி.) இரண்டு ஒத்த - சத்தி-சிவ நடமிரண்டும். (8) 2724. நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க வொளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரம னிருந்திடஞ் சிற்றம் பலமென்று தேர்ந்துகொண் 1டேனன்றே. (ப. இ.) நெற்றியின்கண் நேர்நடுவாம் புருவமத்தியில் காணப்படும் இடைவெளி தில்லைத் திருச்சிற்றம்பலமாகும். ஆண்டு உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் 'சிவசிவ' என்னும் செந்தமிழ்த் திருமறையாகும். பற்றற்றார் பற்றுக்குப் பற்றாய் நிற்பவன் சிவபெருமான். அவனே பரமன். அவன் உடனாக இருக்கும் இருப்பிடம் மேலோதிய புருவநடுவாகிய தில்லைத் திருச்சிற்றம்பலமென்று திருவருளால் தேர்ந்து தெளிந்து கொண்டேன் என்க. (9) 2725. அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவந் தண்டினிற் சாத்தவி சாம்பவி யாதனந் தெண்டினில் ஏழுஞ் சிவாசன மாகவே கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானன்றே. (ப. இ.) அண்டங்களும் அவற்றின் அடக்கமாகிய தத்துவங்களாகும், அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐம்பெரும் நிலைகளும், சத்தியின்வடிவாயுள்ள சாத்தவி, சாம்பவி என்னும் இரண்டும் கூடிய ஏழுநிலைகளும் அடைவுபட - முறைமையாய்ச் சிவன் இருக்கையாகும். அவ்வெழுநிலைகளும் இருக்கையாகக்கொண்டு பரஞ்சோதியாகிய விழுத்திணைச் சிவன் திருக்கூத்துகந்தனன். (அ. சி.) தெண்டினில் - முறைமையில். (10) 2726. மன்று நிறைந்த விளக்கொளி மாமலர் நன்றிது தானிதழ் நாலொடு நூறவை சென்றது தானொரு பத்திரு நூறுள நின்றது தானெடு மண்டல மாகுமே.
1. சிறைவான். 8. திருக்கோவையார், 20. " கண்ணுதலான். சம்பந்தர், 2. 40 - 5.
|