1155
 

'பன்னியநூல் தமிழ்ப்'பாப் பல புனைந்து வழிபட்டு நிற்றல் வேண்டும். அங்ஙனம் வழிபட்டால் அப் பெருமானாரை உள்ளத்தின்கண் பொதிந்து வைத்தலும் வாய்க்கும். இதுவே 'சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே' என்னும் திருமுறையின் அரும் பண்பாகும். பொதிதல் - வேறறக் கலந்து நிற்றல். தொன்னை நெய்யைப் பொதிந்து கொண்டு வேறற நிற்பது இதற்கொப்பாகும். பாப்புனை பணியால் அடியேனையும் எம் முழுமுதல்வனாகிய சிவபெருமான், நந்தியென்னும் திருப்பெயரை உடைய நாதன் திருவருளுடன் கூட்டுவித்தனன். மறவாது நினைந்துகொண்டேயிருக்குந் துணையாய் என்னை நிலைப்பித்தருளினன். நினைந்த அப்பொழுதே அந் நினைவின்கண் நினைப்பித்தருளினன் என்றலுமொன்று.

(அ. சி.) நெகிழ - மனம் உருக. புனையில் - பாக்கள் புனைந்து அவன் புகழைப் பாடினால். பொதியலும் ஆகும் - அவனோடு இரண்டறக் கலக்கலாம்.

(5)

2787. பாலொடு தேனும் பழத்துள் 1இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலுந் துரியம் பொடிபடி வுள்புகச்
சீல மயிர்க்கால் தொறுந்தேக் கிடுமாமே.

(ப. இ.) திருவருளால் சிவபெருமான் செயலறலாகிய துரியம் அடங்கிக் கடந்த விடத்துப் பால் போன்ற திருவருள் தட்பமும் தேன் போன்ற சிவனார் வெப்பமும், முப்பழச் சுவையும், தூய 'பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்த' தூய திருவமுதின் இனிமையும் போன்ற தென்பதன்றி இன்னதன்மைத் தென்றுகூற வொண்ணாததாகவுள்ள திருவடி நுகர்வொழுக்கம் மயிர்க்கால் தோறும் நிறைந்து நின்று குறைவிலா இன்பத்தை யருளும். பாலும் தேனும் ஏனைய போன்று சுவைப் பொருளாக எண்ணலும் ஒன்று.

(அ. சி.) வாலிய - பரிசுத்தமான. மதுரம் - சுவை.

(6)

2788. அமரத் துவங்கடந் தண்டங் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் 2றானே.

(ப. இ.) சிவபெருமான் பிறப்பில்லாதவன்; அதுபோல் இறப்புமில்லாதவன் அம் முறையால் கூற்றை வென்ற குணக்கடல் என்றருளினன். அமரத்துவம் ஈண்டுக் கூற்றுத்தன்மை. கடத்தல் - வெல்லுதல். சிவன் பல்வேறு அண்டங்களுக்கும் அப்பாற்பட்டவன். அவன் முப்பத்


1. பண்ணையும். சிவஞானபோதம், 2. 1 - 3.

" பாலொடு. திருக்குறள், 1121.

2. அன்றாலின். அப்பர், 6. 50 - 3.

" பொறிவாயி. திருக்குறள், 6.

" மண்முதல். சிவஞானபோதம், 9. 3 - 3.