1178
 

வுள்ள உணர்வுமெய் ஏழும் ஊற்றுப் பசுக்கள் எனப்பட்டன. அவை தரும் புலன் அளவிடற்கரிய விழுப்பம் வாய்ந்தது. புலன் - அறிவு. அதனால் ஒருகுடம் பால் போதும் என ஓதினர். காற்றுப் பசுக்கள் என்பது இடப்பால் வலப்பால் நாடிகள் வாயிலாகப் பெறும் உயிர்ப்புக்களாகும். உயிர்ப்பு மூச்னெவும், காலெனவும் ஓதப்படும். கால் - காற்று எனவும் கூறப்படும். அதனால் காற்றுப் பசுக்கள் என்றனர். எனவே அகத்தவ வாயிலாகச் செறிவினை எய்தி ஆருயிர் இன்புறும். அங்ஙனம் அக இன்பத்தைத் துய்த்துக் கொண்டிருக்குங்கால், ஐம்புல இன்பங்கள் வந்து தொடரா. அக் குறிப்பு, 'மாற்றுப் பசுக்கள் வரவறியோமே' என்றோதினர்.

(அ. சி.) ஊற்றுப் பசுக்கள் - வித்தியா தத்துவங்கள். காற்றுப் பசுக்கள். பத்துவித வாயுக்கள். மாற்றுப் பசுக்கள் - புலன்கள்.

(10)

2836. தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டா யெழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானன்றே.

(ப. இ.) ஆருயிர் தட்டான் என்று அழைக்கப்படும். தட்டான் - சார்பாய்ப் பொருந்துபவன். தட்டல் - பொருந்துதல். ஆருயிர் அகத்தில் தோன்றுவதற்கு நிலைக்களமாகவுள்ளது உடல். அவ் வுடலின்கண் மச்சுப் போன்று உயர்ந்த இடத்திலுள்ளது உச்சித்துளையாகும். அதுவே முதன்மையான இடமாகும். அவ் விடத்து அரும்புபோன்று பொருந்தியிருப்பது அமிழ்தூற்றத் தோற்றமாகும். பின் அது விளைந்து செவ்விய அமிழ்தப்பாலாய்ச் செறிந்தது. அதுவே ஆயிர விதழ்த் தாமரையாகும். வட்டமாகிய ஓங்காரம் உள்ளடங்க வாய்மையாகிய திருவைந்தெழுத்துத் தன்னகத்ததாக அருளால் அவ் வுயிர் அமைத்துக்கொண்டது. தகைந்து கொண்டான் - தனதாக்கிக் கொண்டான்.

(அ. சி.) தட்டான் - சீவன். அகத்தில் - உடம்பின்கண். மச்சின் மேல் - கபாலத்தில். செம்பால் - செம்மைத்தன்மை. வட்டம் - பிரணவம். வாய்மை - அஞ்செழுத்து. அதனை - அந்த அமுதை. தகைந்து - தடுத்துத் தன்னுடையதாக ஆக்கி.

(11)

2837. அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனி
திரிக்கின்ற வொட்டஞ் சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல்லான் கறவையைப் பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே.

(ப. இ.) கூல அரிக்கட்டுக்கள் நிறைந்துள்ள நாற்றங்காலாகிய துன்பவயல் உடலாகும். அவ் வுடலின்கண் உயிர்ப்பு விடுக்கும்போது பன்னிரண்டு விரல் அளவு வெளியிற் செல்லும். அதனை எடுத்தலாகிய பூரகம் செய்யுங்கால் எட்டு விரல்தான் உள்ளே தடுத்தலாகிய கும்பகத்தின்கண் அடங்குகின்றது. எஞ்சிய நான்குவிரல் உயிர்ப்பு வெளியே நின்று விடுகின்றது. அங்ஙனம் அவற்றை வெளியில் நிறுத்திவிடாமல் உள்ளே இழுத்து நிறுத்தி விடுதல் வேண்டும். அதுவே சிக்கெனப் பிடித்தலென்ப. அந் நான்கு விரல் உயிர்ப்பும் உள்ளே தங்கச் செய்யும்