1217
 

கண்ணான் நேரும். அதுவே அழிவில் பேரின்பம் எல்லையிலா நல்லின்பம். அத்தகைய பொய்யில்லாத - மெய்யான இன்பத்தினைத் தாந்தாமே தம் முணர்வான் நுகர்ந்தருந்தியுணர்வதன்றி நுவல்வது எவர்க்கும் ஒல்லாது. அதனை நுவல்க என நொடிவது படியில் நகையே. நுவல்வது - சொல்லுவது. நொடிவது - சொல்லுவது. சொல்லொணாமையாற் பொய்யுமன்று. நல்லறிவும், மனைமாண்பும், புனையணியும், வினைத்திறனும், மக்கட்பேறும் உடைய ஒரு பெருங்குடித்தாயானவள் தன் காதற் கணவனுடன் மருவி ஓதற்கரிய இன்பமுற்றனள். இவ்வின்பினை உருவும், திருவும், பருவமும், குணனும், அறிவும், அன்பும், செறிவும் சேரப் பெற்ற தன்மகள் - தவப் பேற்றால் வந்த செல்வி உணர வினவின் அவட்கு உணர்த்துமாறெங்ஙனம்? உணருமாறு சூழ்வுண்டாக்கி எல்லா நலனும் ஒருங்குவாய்ந்த நல்லான் நம்பி ஒருவனுக்கு அவளைத் திருமணம் புரிவித்து அவன்றன் வாழ்க்கைத் துணையாய் வாழ்வித்த காலத்துத் தானே உணர்வள். இம்முறையே செவ்விவாய்ந்த ஆருயிர்கள் சிவகுருவின் திருவருளால் திருவடிக்கண் கூட்டப்பெற்றதும் அப்பேரின்பத்தினைத் தாமே நுகரும் முகக்கண்ணால் காணும் புறப்பொருள்கள் வாயிலாக நீங்கள் அடையுமின்பம் நிலையில் சிற்றின்பம். அத்துடன் அமைந்து விட்டால் மூடராவீர். அகக்கண்ணாகிய திருவருட்கண்ணால் உணர்வினின் நுகர்வாகக்காண்பதே நிலையுடைய பேரின்பம் என்றலும் ஒன்று.

2905. அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரஞ் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பத மாளக் கலந்தமை
எப்படி யப்படி என்னுமவ் 1வாறன்றே.

(ப. இ.) வேறாய் நின்ற இருபொருள் பிரிக்கமுடியாவாறு ஒன்றாய்க் கலந்து இரண்டும் அழியாது ஒன்றாய்நிற்பதற்கு ஒப்பு உப்பும் அப்பும். ஆதலால் நீரிற்கலந்து கரைந்து ஒன்றாய்நிற்கும் உப்பென்று சொல்லும்படி அத்தனாகிய சிவபெருமான் ஆருயிருடன் அணைந்தருள்வன். அணையவே பொருளாகப் பராபரமாகிய பேருயிரென்றும் பரமாகிய ஆருயிரென்றும் பேசப்படும் ஆண்டானும் அடிமையும் ஆகிய இரண்டும் புணர்ப்பல் ஒன்றாகும். ஒன்றாங்கால் இறவா இன்பம் என்னும் ஒரு பெயரே பெறப்படும். கவர்பட்டுச் சொல்லும் நிலையும் மாறும். கவர்பட்டுச் சொல்வதாவது அவன் நான், அல்லது ஆண்டான் அடிமை, இன்பு அன்பு எனக் கூறுவன. திருக்கோவில் செல்வார் பலராய்ப் பல பெயருடையராய்க் காணப்படினும் அத் திருக்கோவிற் சார்பால் எல்லாரும் 'கோயிற் பிணாப்பிள்ளைகாள்' என்பது போன்று கோவிலார் என்றே பெயர் பெறுவர். இதுபோல், கல்லூரி, வகுப்பு, அலுவலகம், மணமனை முதலியனவும் சார்புநிலையால் ஒருபெயரே பெறுதல் காண்க. இதனைத் 'தன்நாமங் கெட்டாள்' என்னும் அப்பர்மொழியும் வலியுறுத்தும். கோப்பெருஞ் சோழன் தனக்கும் பிசிராந்தையார்க்கும் உள்ள வேறன்மையைக் கூறப்போந்தபோது பிசிராந்தையார் 'தன்பெயர்


1. மெய்ஞ்ஞானம். சிவஞானபோதம், 7. 3 - 3.

" இரும்பைக். சிவஞானசித்தியார், 11. 2 - 5.

" கொண்ட. திருக்களிற்றுப்படியார், 24.

" சிவனெனவே. " 91.

" கேட்டன். புறநானூறு, 216.