(ப. இ.) புலன்வடிவாகச் செல்லும் உள்ளத்தாமரையினைத் திருவருளால் திருப்பிச் சிவபெருமான் திருவடிக்கண் வைத்தல்வேண்டும். வைக்கவே அங்கியாகிய திருவடிமெய்யுணர்வு மேன்மேன் முறுகிவளரும். தூண்டாவிளக்கின் தகளித்தன்மை தொன்மையே வாய்ந்த நன்மைக்குரிய ஆருயிரினிடத்து நெய்யாகிய திருவடிப் பேரின்பத்தைத் திருவருளால் சேர்த்தல்வேண்டும். சேர்க்கவே அவ் வுள்ளமாகிய அமைதிமிக்க அருள்நிறை ஒருத்தி ஏற்றுக்கொண்டனள். அவளே நல்லாள். அவளே படியிலா முடிமணியனையாள். அந்நிலை அருளால் கைவந்துறவும் அறியாமையைச் செய்யும் ஆணவவல்லிருளென்னும் கொடியோன் செயலற்று மாண்டு மடிந்து ஒடுங்கினன். (அ. சி.) மீண்டார் - இந்திரியப் போக்கினின்றும் மீண்டார். கமலம் - உள்ளக்கமலம் தூண்டாவிளக்கு - சீவன். தகளி - உள்ளம். (21) 2938. அன்புள் உருகி அழுவன் அரற்றுவன் என்பும் உருவ இராப்பகல் ஏத்துவன் என்பொன் மணியை இறைவனை ஈசனைத் தின்பன் கடிப்பன் திருத்துவன் 1தானன்றே. (ப. இ.) திருவருள் நினைவால் நீங்காதோங்கும் பேரன்பால் உள்ளுருகி இன்பவேட்கைப் பெருக்க இயல்பாம் இனிய அழுகையினைப் புரிவேன். அழுது குறையிரந்து முறையிடுதலாகிய அரற்றுதலைச் செய்வேன். எலும்பும் உருகுமாறு இரவும் பகலும் இடைவிடாது 'தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று அழுது காமுற்று அரற்றி' வணங்குவேன். என் உணர்வாகிய பொன்னின்கண் அருளால் அழுத்திய விலைவரம்பில்லா இயற்கைநிலைசேர் செம்மணியை, தென்னாட்டார்க்குரிய சிவனே. எந்நாட்டவர்க்கும் இறைவனாகலின் அத்தகைய இறைவனை, 'என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளிய' ஆண்டவனை அவன் திருவடியுணர்வால் காணப்பெறுவேன். காணப்பெறின் தின்பதாகிய ஊடுதலைப் புரிவேன். கடிப்பதாகிய உணர்தலை ஆற்றுவேன். திருத்துவதாகிய புணர்தலைப் பூணுவேன். தான் - அசை. (22) 2939. மனம்தான் விரிந்து குவிந்தமா தவ்வம் மனம்தான் விரிந்து குவிந்தது வாயு மனம்தான் விரிந்து குவிந்தமன் னாவி மனம்தான் விரிந்துரை மாண்டது 2வீடே
1. முன்னை. அப்பர், 5. 91 - 2. " ஊடல். திருக்குறள், 1109. " புலப் பேன்கொல். " 1267. " சூடுவேன். 8. திருவம்மானை, 17. " நாடி. அப்பர், 5. 63 - 8. " ஆனந்த. 8. திருக்கோவையார், 307.2. உரைமாண்ட. 8. திருத்தோணாக்கம், 14. " (பாடம்) தவம், னுயிர், முத்தியே.
|