களாகிய முப்பத்தொரு தத்துவங்களுடனும் கூட்டிக் குழைக்கப்பட்ட உடம்பினையுடையர். நிலமுதல் அசுத்தமாயை ஈறாகிய தத்துவங்கள் முப்பத்தொன்றென்ப. அவ்விருவரும் அடியேங்கட்குக் கட்டளையிடும் பணி ஏதென்று சிவபெருமானிடத்து இரந்து பின்னிற்பர். ஆதியாகிய நடப்பாற்றலோடு கூடிய சிவபெருமான் அவ்விருவர் வேண்டுகோளையும் ஏற்றருளி அவர் செய்ய வேண்டிய காத்தல் படைத்தல்களை முறையே அவர்கட்கு அருள்புரிவன். (28) 396. அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்1 மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும் பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட் கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.2 (ப. இ.) சிவபெருமான் அருளிய திருவாணையினால் அயன் நால்வகைத் தோற்றத்து ஏழ்வகைப் பிறப்பினுள் எண்பத்து நான்கு நூறாயிர வேறுபாட்டோடு கூடிய உடம்புகளை ஆருயிர்கட்குப் படைத்தளித்தனன். சிவபெருமான் அம்மையப்பராக விளங்கும் தொன்மை மெய்ப்பரிசினால் ஆருயிர்கள் இங்ஙனம் விரிந்து நின்றன. இவ்வுண்மையினை யுணராது பாழ்ங்கோளராகிய நாத்திகர்கள் இப் படைப்பினைப் பொய்த்தன்மை என்று புகல்வர். சிவபெருமான் அவர் தம் ஆணவ ஆற்றல் தொழிற்பட்டு அகலும் பொருட்டு அவர்களை அவ் வாணவ வல்லிருள் மூடுதலிலேயே வைத்து நின்றனன். (29) 397. ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள் போதித்த வானொலி பொங்கிய நீர்புவி வாதித்த சத்தாதி வாக்கு3 மனாதிகள் ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. (ப. இ.) தூவாமாயையின் காரியமாகிய மூலப்பகுதியின் காரியங்களாக ஞாயிறு, திங்கள், தீ ஆகிய முச்சுடர்களும் எண்புலக் காவலர்களும் தோன்றினர். எண்புலக் காவலராவர்: ஞாயிறு, நமன், வருணன், சோமன், தீ, நிருதி, வாயு, சாந்தன் என்போராவர். போதத்திற்கு வாயிலாகிய எழுத்தோசைக்கு இடனாக இருப்பது வான். அவ் வானும், ஒலியாகிய காற்றும், பெருகும் தன்மை வாய்ந்த நீரும், நிலமும் ஆகிய பூதங்களும் தூவாமாயையின் காரியங்களே. அளவையான் ஆராய்ந்து முடித்தலாகிய வாதித்த சத்தாதி எனப்படும். ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம் எனப்படும் தன்மாத்திரை ஐந்தும் அதன் காரியங்களே. வாக்காதியாகிய செய்தற் கருவிகள் எனப்படும் வாய், கால், கை, எருவாய், கருவாய் என்னும் ஐந்தும் அதன் காரியங்களே. மனாதிகள் எனப்படும் உட்கலனாகிய எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பாகிய நான்கும் அதன் காரியங்களே. இவற்றை முறையே சித்தம் மனம் அகங்காரம் புத்தி எனவுங் கூறுப. இனம்பற்றிச் செவி, கண், மெய், நாக்கு, மூக்கு என்னும் அறிதற் கருவிகள் ஐந்தும் அதன் காரியங்களே யாம். சித்தாந்த சைவ
1. உரைசேரு சம்பந்தர். 1. 132 - 4. 2. பொன்னை. அப்பர், 4. 106 - 2. 3. ஒன்றணையா. சிவஞானபோதம், 4. 3 - 1.
|