விழுமிய முழுமுதற் பெரும் பொருளாம் சிவபெருமானாவன். தவ வாழ்க்கைக்குத் தகுதியமைந்த தூயவுணவினைச் சிவ நினைவுடன் சுவைத் துண்ணும் நாவே ஊண்படு நன்னாவாகும். அத்தகைய உணவினை உட்கொண்ட நெஞ்சமே நன்னெஞ்சமாகும். அத்தகையார் திருவருளால் சிவனை உணர்வர். உணரவே பிணிப்புக்களெல்லாம் மிகுந்த தொலைவில் அகன்று விடும். நிலையில்லாத உலக நிகழ்ச்சிகள் அவர்களை அணையா. பொய் + கை + செயல்; நிலையில்லாத செய்கை முறைகள். அத்தகையாரும் அச் செய்கைக்கண் நெருங்கார். (4) 421. தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம் அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ் சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும் இருளும் அறநின் றிருட்டறை யாமே.1 (ப. இ.) திருவருளால் தெளிவினையடைந்த உலகத்தோர்க்கும், சிவவுலகத் தேவர்க்கும் இன்பத்தினை அருளும்வகை செய்தளிப்பவன் அம்மையப்பராகிய சிவபெருமான். வளர்தலும் தளர்தலுமாகிய தன்மை சுருள் எனப்படும். அத்தகைய தன்மையினையுடைய திங்களும், மிக்க சுடராகிய ஞாயிறும், தூயவெப்பமிக்க தீயும், இவற்றால் போக்கப்படும் புற இருளும் முற்றும் அடங்கத் திருவருள் தோன்றும். ஆயினும் செவ்வியில்லார்க்குத் தன்னைக் காட்டாமையால் அவ்வருள் இருட்டறை போன்று மறைப்பினைச் செய்து நிற்கும். இருட்டறை என்பது, அக இருளாகிய ஆணவத்தை அறுக்கும் பொருள் என்பதாகும். அகவிருட்டு - ஆணவ வல்லிருள். (5) 422. அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை2 உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப் பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க் கரக்கின் றவைசெய்த காண்டகை யானே. (ப. இ.) நடப்பாற்றலாகிய ஆதி வினைக்கீடாகத் துன்புறுத்தும் அருள் என்ப. அவ்வருள் மாயா காரியமாகப் படைக்கும் பொருள் பல. அவற்றுள் ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம் என்னும் ஐந்தும் புலன்கள் என்று சொல்லப்படும். இவற்றை நுண்மை எனவும், பூதமுதலெனவும், தன்மாத்திரை எனவும் கூறுப. அவைபோல் புறப்பொருள் வாயிலாக வரும் ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம் என்னும் ஐந்தும் புலன் என்றே சொல்லப்படும். இவ்விரண்டும் புலன்கொளி புலன் என்று முறையே வழங்கப் பெறும். புலன் கொளியானது புலனாகிய பொருளுடன் கலந்து பற்றிப் பொன்னுரைக்கும் கட்டளை அப் பொன்னை ஏற்றுத் தான் பொன் வண்ணமாயிருப்பதுபோல் புலன்கொளியும் கொண்ட புலத்தின் வண்ணமாக இருக்கும். அவ்வாறு இருப்பதற்கு அவாவினை எழுப்புவது மனம். எனவே ஐம்புலன்கொளியும் மனமும் ஒன்றோடொன்று ஒவ்வாத ஐம்பூத உடம்பகத்து உருவமாகப் பரந்திருக்கும். அதுபோல நிலவுலகத்
1. அருக்கனேர். சிவஞானபோதம், 11. 2 - 1. 2. உன்னுருவிற். அப்பர், 6. 27 - 4.
|