200
 

என்று சொல்லப்படும் ஓசை, ஊறு, ஒளி, சுவை நாற்றம் என்ற ஐந்து, மனம், எழுச்சி, இறுப்பு என்ற மூன்று ஆகிய எட்டுங்கூடிய வடிவம். இவ்வடிவம் படைப்புக் காலந்தொட்டுப் பேரொடுக்க காலம் வரை எவ்வகை மாறுதலும் எய்தாது. எல்லாவுயிர்க்கும் வேறுபாடின்றி ஒன்றுபோல் உள்ளது. இதனையே திருவள்ளுவ நாயனார் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று அருளினர். பின்னர் வழங்கப்படுவதும் மாறப்படுவதுமாகிய பருவுடம்பே செய்யும் வினைக்கீடாக வேறுபடும். அதனையே திருவள்ளுவ நாயனார். 'சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமை யான்' என்று அருளினர். இவ்வேற்றுமையுடம்பு பெரும்பூதம் ஐந்து, அறிதற் கருவி ஐந்து, செய்தற் கருவி ஐந்து, வளிபத்து ஆகிய இருபத்தைந்து பொருள்களாலாயது. அவை திருவருளால் அமைக்கப்பெறுவன. அவற்றைத் தான் முன் பிரிந்த இருத்தைந்தென்று ஓதினர். இவ்விருபத்தைந்துந்தான் பருவுடம்பு ஆகும். இறப்பும் பிறப்பும் பருவுடம்பிற்கேயாம். இப்பருவுடம்பின் கண் முன் நுண் உடம்புடனே பிரிந்து சென்ற ஆருயிரை வினைக்கீடாகப் புகச் செய்கின்றனன். இவற்றைத் திருவருள் கருப்பையினுள் உயிர்க்குயிராய் நின்று அமைக்கின்றது. அதுவே சிவபெருமான் ஆவதறிந்து அமைக்கின்றான் என்பதாகும்.

(அ. சி.) இருபத்தைந்து - பூதம் 5, புலன் 5, ஞானேந்திரியம் 5, கன்மேந்திரியாம் 5, காரணம் 4, புருடன் 1 ஆக 25.

(1)

437. அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.1

(ப. இ.) நுண்ணுணர்வான் அறியப்படுகின்ற மூலாதாரத்துக்கு மேல் அகட்டுத் தீயும் நீரும் நிறைந்துள்ள கருப்பையில் அறிவோடு கூடிய உயிர் தங்கிய கருவுடன் வெவ்விய இளங்காலை முடக்கித் தலையுடன் சேரத்து ஓம் வடிவமாய் அமைக்கின்றனன். கருப்பையினுள் சுமையாக நின்ற அவ்வுயிர் வெளிப்போமாறு திருவுளங்கொண்டு முந்தித் தவங்கிடந்து தாங்கிய அன்னை வயிற்று முந்நூறு நாளாகிய பத்துத் திங்களும் நீங்கும் சுமையாக வைத்தருளினன். பறிகின்ற - நீங்குகின்ற. பாரம் - சுமை.

(அ. சி.) அங்கி அப்பு - உதராக்கினியும், நீரும். செந்தாள் கொழுவி - சிவந்த பாதங்களைக் கட்டி. ஓம்துறை - பிரணவக் கரை. பறிகின்ற - விட்டு நீங்குகின்ற. பத்து - பத்து மாதம்.

(2)

438. இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.2


1. முந்தித். பட்டினத்தடிகள், தாயாருக்கு, 2.

2. மனையறத்தில், 12. சம்பந்தர்- 19.

" பேறிழ. சிவஞானசித்தியார், 2. 2 - 6.