207
 

மெய் ஐந்து : அத்தன், அன்னை, அருளோன்,ஆண்டான், ஆசான் என்பன. உணர்வுமெய் ஆறு : காலம், ஊழ், உழைப்பு, உணர்வு, விழைவு, மருள் என்பன. உடல் மெய் இருபத்துநான்கு : மூலப்பகுதி, இறுப்பு, எழுச்சி, மனம் அறிதற்கருவி ஐந்து, செய்தற் கருவி ஐந்து, பூத முதலாம் நுண்மை ஐந்து, பூதம் ஐந்து என்பன. பூதமுதல் என்பது பூதத்திற்குக் காரணம் என்பதாகும். முதல் - காரணம்; தன் மாத்திரை.

(அ. சி.) ஐந்துடன் - சிவ தத்துவங்கள் ஐந்துடன். உலைப் பொறி - சரீரம்.

(16)

452. இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு1
வெந்தது சூளை விளைந்தது தானே.

(ப. இ.) மனையறத்தில் இன்பமுறும் மகப்பெறுவான் வேண்டிச் சிவபெருமானை நோக்கித் தவமுயன்ற இயல்புடைய இருவரும் ஆண்டவன் திருவுள்ளத்தால் இசைந்து உடல் இசைவிப்பதன் பொருட்டுக் கருவாக வைத்த மண் ஒன்று. உடம்பு இடும்பைக்கு இலக்கம். அதனால் இடும்பைக்கே கொள்கலமாகிய துன்பக்கலசம் என்றனர். அவ் வுடல் ஓருயிர் அணைதற்பொருட்டு அமைந்தது. அவ் வுடற்கலசத்துக்கு ஒன்பது தொளைகள் உள்ளன. அவ்வொன்பதும் நீர்ச்சால் எனப்படும். மேலும் அதன்கண் பத்துப்பொறிகள் உள்ளன. அப் பத்தும் அறிதற்கருவியும் செய்தற்கருவியும் என்ப. இவை பத்தும் புறக்கருவியாகும். மேலும் அகக்கருவி எட்டென்ப. அவை, நுண்மை ஐந்து, மனம் எழுச்சி இறுப்பு மூன்று என்பன. இவற்றை அருவுடம்பெனவும் புரியட்டரூபம் எனவும் கூறுப. இவ்வுடற்கலசம் மூலத்தீயாகிய சூளையில் வெந்ததாகும். திருவருளாணையால் நிகழ்வதால் எளிதில் விளைந்ததென ஓதுவார் தானே விளைந்தது என்றனர்.

(அ. சி.) துன்பக்கலசம் - சரீரம். ஒன்பது நீர்ச்சால் - ஒன்பது கழிவாய். கலசம் பதினெட்டு - 18 பக்க எலும்பு.

(17)

453. அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே.

(ப. இ.) முன்வினைக்கீடாகக் கருவினுள் அமைக்கப்பட்ட பேறு, இழவு. இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு என்னும் ஆறினுக்கும் ஏற்றவாறு ஆருயிர்கட்குக் குணங்கள் உண்டாகும். அவ்வுண்மையினைத் திருவருள் நாட்டத்தால் அறியாதிருக்கின்றீர். அங்ஙனம் பெருகும் குணங்களில் அல்லதைவிட்டுப் பிறியீர். நல்லதைப் பிறித்து அறியுங்கள் என்பதும் ஒன்று. அவ் வழியாகக் கைவரும் சித்திகளில் நல்லதன் கண் செறிந்து நிறைந்து பயன்கொள்ளீர். கருவினுள் வித்து இட்டது


1. ஒன்றணையா. சிவஞானபோதம், 4. 3 - 1.

" சாக்கிர. சிவஞானசித்தியார், 4. 3 - 2.