செய்யும் செந்நெறியாளரே பெரியார். செயற்கரியன சீலம் நோன்பு செறிவு அறிவு என்னும் நானெறித் தொண்டு. இவற்றை முறையே சரியை கிரியை யோகம் ஞானம் எனவும் கூறுவர். இத் திருப்பாட்டின் கண் குறித்த நானெறிவல்லார் பணிகள் முறையே நவிலப்படுகின்றன. அவருடன் நடத்தல், வாழ்தல், தேடல், கூடல் செய்வாரே பெரியாரைத் துணைகோடற்கு உரியராவர். (அ. சி.) ஓடவல்லார் - மூர்த்தி - தலம் - தீர்த்தம் முறையால் வணங்குவோர். பாடவல்லார் - சிவன்புகழ் பாடுவார். தேடவல்லார் - யோகிகள். கூடவல்லார் - ஞானிகள். (1) 526. தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும் மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும் நீயிடர்ப் பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே போமிடத் தென்னொடும் போதுகண் டாயே.1 (ப. இ.) பெரியோர் மிகத் துன்புற்று வாடினும் அத் துன்பத்தின் கண் தங்கள் மனத்தினைச் செலுத்தார். நீயிடர்ப் ...டாயே - நெஞ்சமே வருந்தி என்ன பயன்? அவ் வருத்தம் நீங்க அப் பெரியாரிடத்து யான் போம்போது என்னுடன் வருவாயாக. (2) 527. அறிவார் அமரர் தலைவனை நாடிச் செறிவார் பெறுவர் 2சிலர்தத் துவத்தை நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும் பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே.3 (ப. இ.) சிலர் தேவர்க்கும் மூவர்க்கும் யாவர்க்கும் மேலாம் சிவபெருமானைத் திருவருளால் உள்ளத்தே நாடி அறிவர். அவன் திருவடியொடுக்கத்தால் மெய்யுணர்வு கைவரப் பெறுவர். தத்துவம் - மெய்; மெய்யுணர்வு. நெறிதான் ...மாமே - நானெறிக்கண் படிப்படியாக உயர்த்தும் அப் பெரியாருடன் கூடி வாழ்வதே பேரின்பமாம். (3) 528. தார்சடை யான்றன் தமராய் உலகினிற் போர்புக ழானெந்தை பொன்னடி சேருவர் வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங் கோவடைந் தந்நெறி கூடலு மாமே.4 (ப. இ.) சிவபெருமானுக்கு உரியவராய் மதப்போரை விரும்பாமல் வாய்வாளாது உள்ளத்தே நினைவோர் பெரியர். அவர்க்கு அருள்
1. உற்றநோய். திருக்குறள், 442. " இடுக்கண்பட் அப்பர், 4. 11 - 4. 2. (பாடம்) சிவதத் துவத்தை 3. அரியவற்று. திருக்குறள், 443. 4. ஞமனென். அப்பர், 5. 97 - 18. " தம்மிற். திருக்குறள், 443.
|