295
 

களின் ஆற்றலை யோகப்பயிற்சியால் வெல்லுதல். படை - கூட்டம் விண்டதுவே - வெளிப்பட்டதேயாம்.

(அ. சி.) கூட இருந்திடில் - பூத தாரணையோடுகூட இருந்தால்.

(40)

கரிமா
(விண்தன்மை)

660. ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலா
1மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.

(ப. இ.) ஆகின்ற மின்னொளி - அகத்தவமாகிய யோகப் பயிற்சியிற் காணப்படும் மின்னல்போலும் ஒளி. பாகின்ற....காணலாம் இருந்த இடத்திலிருந்தே உலகப்பரப்பு முழுவதும் ஒருங்கு காணலாம். புருவ நடுவுக்குமேற் காணப்படும் ஆயிரம் இதழ்த் தாமரைப்பரப்பு முழுவதும் ஒருங்கு காணலாம் என்பதும் ஒன்று. மேகின்ற....நின்றது - நாழிகை நாள் முதலவாகக் காரியப்படுத்தப் பொருந்துகின்ற காலமெய் வெளிப்பட்டுத் தனித்துநின்றது. மேகின்ற: மேவுகின்ற என்பதன் திரிபு. போகின்ற...மில்லையே - கழியவேண்டிய வாழ்நாட்கள் கழிவனவுமில்லை.

(அ. சி.) பூவின் பரப்பு - சக்கிர அறைகள்.

(41)

661. போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே.

(ப. இ.) உயிர்ப்புப் புறம் போவதும் அகம் புகுவதும் என்னும் நிலையில்லை. சாவ....தானில்லை - இறப்பும் பிறப்பும் இல்லை. தாமத...வார்க்கே - முக்குணத்துள் ஒன்றாகிய அழுந்தல் என்னும் கடைக்குணமில்லை. எனவே முக்குணத் துன்பமும் இல்லை. நடுநாடியிலுள்ள உட்டொளை உயிர்ப்பு நிறைந்திருப்பதால் ஒளியாவதும் இல்லை. உண்மையறியும் பண்பினர்க்கு தாமதம் அழுந்தல், இனக்கோளால் ஏனை அமைதி (சாத்விகம்) ஆட்சி (இராசதம்) இவற்றின் துன்பங்கள் இல. தமர் - தொளை.

(42)

662. அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாங்
குறிந்தவை யோராண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகாய மேவலு மாமே.

(ப. இ.) பராசத்தி - வனப்பாற்றலாகிய திருவருள். பறிந்தது...யெல்லாம் - பூதக்கூட்டங்களின் தொடக்கனைத்தும் அகன்றது. இவ்


(பாடம்) 1. மேனின்ற.