341
 

(ப. இ.) அங்கப் புணர்ச்சியாகிய பரியங்க யோகப் பயிற்சியால் உடம்பின்கண் அழியாது தங்கும் நாதவிந்துக்கள். விந்து நுகர்வு நினைவால் கீழ்நோக்கி வீணாகாமல் மேல் நோக்கிச் செலுத்தி நெற்றி நடுவில் தங்கும்படி அமைப்பர். அப்படி அமைத்தவர் பொறி புலன்களைத் தம் வழிப்படுத்தும் தலைவருமாவர். தத்துவம் - அழியாதது. போகம் - நுகர்வு நினைப்பு. பரிகரித்து - நீக்கிச் செலுத்தி.

(அ. சி.) அங்கப்புணர்ச்சி - பரி அங்கி யோகம். பங்கப்படாமல் நாதவிந்துக்கள் கெடாமல்.

(4)

809. தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.1

(ப. இ.) ஒருமைப் (யோகம்) பயிற்சியால் புலன்களை (பொறி)த்தன் வழிப்படுத்தினால் அப்படிச் செய்தவர் ஐம்பொறிகளுக்கும் தலைவராவர். மேலும் உட்கலன்களோடு கூடிய நுண்ணுடற்கும் தலைவராவர். அதனால் போகமாகிய நுகர்வும் அவர் வழிப்படும். படவே திருவடியுணர்வாகிய மெய்ஞ்ஞானத்துக்கு உரிமையாம் தலைமை எய்துவர்.

(அ. சி.) தன்வழி அஞ்சு - ஐம்புலன்களும் தன் வசமே.

(5)

810. அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே.2

(ப. இ.) பரியங்க யோகம் பயில்வார் ஐந்து நாழிகை அளவு பயிலுதல் வேண்டும். அதற்குமேலும் பயிலப்புகின் ஆறாவது நாழிகையில் துணைவி துணைவன்பால் கொள்ளும் புலவியினை நீளவிட்டால் நெஞ்சு நிறைந்தது வாய் சோர்வதுபோல் விந்து வெளியாகும். ஆதலால் பரியங்கயோகம் ஐந்து நாழிகையேயாம். கடிகை - நாழிகை.

(6)

811. பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே.

(ப. இ.) ஐந்து நாழிகை அளவு இப் பரியங்க யோகம் பயின்றவரே திருவருட் பேற்றைச் சேர்வர். ஏனையோர்க்கு, அப் பேறு


1. அனுச. அப்பர், 5 . 65 - 6.

" துன்பமா. திருக்களிற்றுப்படியார், 46.

" இந்திரிய. சிவஞான சித்தியார், 2 - 1.

2. உப்பமைந். திருக்குறள் 1302.