நமசிவய, 2. ஓம் நமசிவய, 3. நமசிவய, 4. சிவயநம, 5. சிவயசிவ, 6. சிவசிவ என்ப. அந்திக்க - வந்திக்க; வணங்க. (19) 850. ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல் வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.1 (ப. இ.) பகற் குருடாம் கோட்டான் போன்ற அறிவில்லார் தாங்களாக ஓதியும் பிறர் உரைப்பக்கேட்டும் அடைதற்காம் பேற்றினை அறியார். உயிர்ப்பின் துவக்கமும் முடிவும் உணர்ந்து அடக்கும் வன்மை பெற்றவரானால் அறிவுருவாம் சிவபெருமான் அங்கு அப்பொழுதே வெளிப்பட்டருளுவன். அந்திக்க - அடக்க. (அ. சி.) ஆதியும் அந்தமும் - சுவாசம் உதித்தலும் ஒடுங்குதலும். (20) 851. பாம்பு மதியைத் தினலுறும் பாம்பினைத் தீங்கு கதிரையுஞ் சோதித் தனலுறும் பாம்பு மதியும் பகைதீர்த் துடன்கொளீஇ நீங்கல் கொடானே நெடுந்தகை யானே.2 (ப. இ.) முதலிடமாகிய பாப்பிருக்கை (குண்டலி) புருவநடுவாகிய மதியமிழ்தைக் கீழிழுத்துத் தின்ன முயலும் வெப்பஞ் செய்கின்ற கதிரையும் அக் குண்டலித் தீ வாட்டும் இவற்றைத் திருவருள் துணையால் அவ்வவற்றினிடத்தில் மாறுபாடின்றி அமையும்படி பயின்றால் நெடுந்தகையனாகிய சிவனும் மதியும் பாம்பும் பகைதீர்ந்து உறவாய் உடன் வாழும்படி செய்தருள்வன். (அ. சி.) பாம்பு - குண்டலினி. மதி - அமுதம். தீங்கு கதிரை - தீங்கு செய்கின்ற சூரியன். (21) 852. அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப் பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று நயந்தரு பூரணை உள்ள நடத்தி வியந்தரு பூரணை மேவுஞ் சசியே. (ப. இ.) பாம்பினால் விழுங்கப்பட்ட திங்கள் அப் பாம்புவிட்டு விலகுகின்றவரையும் உறக்கமின்றி இருந்து, விட்டு விலகியதும் விரும்பத் தகுந்த பூரணையாகிய நடுநாடி வழியாக உயிர்ப்புப் பயிற்சியைப் பயின்று புறநாட்டமின்றியிருந்து மேற்கொள்வார்க்குச் சசியாகிய புருவநடுவின்கண் விளையும் திங்கள் அமிழ்தம் கைகூடும் என்க. பூரணை - நடுநாடி. (அ. சி.) அயின்றது - பாம்பினால் விழுங்கப்பட்ட மதி. (22)
1. பகல்வெல்லும். திருக்குறள், 481. 2. தேனும். 12. கூற்றுவநாயனார், 9.
|