2. திருவம்பலச் சக்கரம் 894. இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று இருந்த மனையொன்றில் எய்துவன் றானே. (ப. இ.) எண்ணூற்றெண்பத்து நான்காம் பாட்டில் ஓதிய திருவம்பலச்சக்கர அறைகள் இருபத்தைந்து. இதன்கண் மேலும் பன்னிரண்டு வரைகள் வரைந்தால் பதினொரு அறைகள் வரும். ஆக மொத்தம் அறைகள் முப்பத்தாறாகும். இவற்றுள் இடையிலுள்ள ஓர் அறையில் சிகர முதல்வன் வீற்றிருந்தருள்வன். இஃது அருஞ்சைவர் மெய்கள் ஆறாறு என்பதை நினைப்பிக்கும் குறிப்புமாகும். (அ. சி.) வட்டங்கள் - 25 அறைகள். ரேகை - வரை. ஈராறு பத்தொன்று - 12-ம் 11-ம். (1) 895. தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந் தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந் தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந் தானொன்றி லேயொன்று மவ்வரன் தானே. (ப. இ.) மேற்கூறிய இருபத்தைந்து அறைகளிலும் நடுவாகத் தோன்றும் எழுத்துச் சிறப்பென்னும் செம்பொருளாகும். அதுவே சிவம். மற்றைய 'வ, ய, ந, ம' என்னும் நான்கெழுத்துக்களும் சேர்ந்து ஆண்டவனுடைய பொன்றாப் புகழ்சேர் திருப்பெயராகும். 'நந்திநாமம் நமசிவய' என்னும் திருமுறையான் உணரலாம். நாற்கோணம் உள்ளிட்ட நான்கு பெருந்திசைகளும் இந் நான்கெழுத்தும் ஆகும். இந்நான் கெழுத்திலும் சிகரம் யாண்டும் உடனாய் நிற்கும். சிவபெருமான் திருப்பெயரெழுத்து ஐந்தாகும். (அ. சி.) தன்னெழுத்து - சி. நான்கு - சிகரம் ஒழிந்த நாலு. (2) 896. அரகர என்ன அரியதொன் றில்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே.1 (ப. இ.) மலஆற்றலை வினை அரத்தால் தேய்ப்பித்தலின். அரனென்னப்பட்டனன். மாயாகாரியத்தை நடப்பாற்றலால் ஒடுக்குதலின் கரன் என்னப்பட்டான். கரன்: கரப்பவன். கரத்தல் - ஒடுக்குதல். இவ் வுண்மை "காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி" என்னும் எட்டாம் திருமுறையான் உணரலாம். எனவே, இருசொற்களின்
1. மற்றவர்க. 12. சம்பந்தர், 910.
|