களையும் கடந்த நிலையில் தண்சுடராக நின்றருள்வன். அத்தகைய தண்சுடரோனைச் சிவமறையோர் ஓமத் தலைவனாகக் கொள்வர். அவனே உண்மை ஓமத் தலைவனுமாவன். (8) 93. ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை ஈமத்துள் அங்கி1 இரதங்கொள் வானுளன் வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் கோமத்துள் அங்கி குரைகடல் தானே. (ப. இ.) அஞ்செழுத்தால் செய்யப்படும் ஓமத்துள் வளர்க்கின்ற சிவ வேள்வித் தீயும் சிவபெருமானே; அவனே நம் தலைவன். ஒவ்வொருவரின் இறுதிக் காலத்துச் செய்யப்படும் அந்தியேட்டியாகிய பெருமண வேள்வித் தீக்கண் விளங்குபவனும் அவனே. இரதங்கொள்வான்: அவ்வேள்வித் தீயினைத் தேராகக் கொண்டருள்பவன். இணரெரிதோய் வன்ன விளைவாய் வரும் வினைப்பயன் கடல் போன்றது. அவ் வினைக்கடலை அழித்தொழிப்பது மிக்க ஒளியோடு காணப்படும் ஒலிக்கின்ற கடல் போன்ற பெருவேள்வித் தீ என்க. (அதனால் பெறப்படும் திருவடியுணர்வே வேள்வித் தீ என்க.) (அ. சி.) ஓமம் - பிரணவத்துடன் கூடிய மந்திரத்தால் செய்யும் அக்கினி காரியம். இது வடமொழியில் ஹோமம் என வழங்கப்படுகிறது. ஈமத்துள் அங்கி - சுடுகாட்டில் செய்யும் அக்கினி காரியம். அந்தியேட்டி - ஈமக்கடன். (9) 94. அங்கி நிறுத்தும் அருந்தவர்2 ஆரணத்து அங்கி இருக்கும் வகையருள் செய்தவர் எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி பொங்கி நிறுத்தும் புகழது வாமே. (ப. இ.) மெய்ப்பொருள் அடையாளமாகிய சிவச்சுடரே சிவவேள்வித் தீயாகும். அதை உலகின்கண் நிறுவினவன் அருந்தவனாகிய சிவ பெருமான். அவன் வழிப்பட்டு அவ் வேள்வியினை நடாத்தும் சிவமறையோரும் அருந்தவர் எனப்படுவர். அத் தவத்தோர் வாயிலாகவே அவ் வேள்வி முறையினை விளக்கும் செந்தமிழ்த் திருநான்மறை, முறையாகிய ஆகமம் அருளிச் செய்தவனும் சிவனே. அவ் விறைநூலின் வழி எங்கணும். வேள்வியினைச் செய்ய ஆருயிர் இளைப்பினை எய்தும். அவ்விளைப்பகலப் பெரும்பதியாகிய வழிப்பேறாம் சிவவுலகத்தினை எய்துவிப்பன். சிவபெருமானுக்கும் அவனை வழிபடும் சிவமறையோர்க்கும் மிகுந்து நிலைபெறும் பொன்றாப் புகழ் இதுவேயாம். (அ. சி.) ஆரணத் தங்கி - தமிழ் வேத ஆகமங்களில் கூறிய சிவாக்கினி. (10)
1. ஏறுகந். சம்பந்தர், 3. 125 - 5. 2. இன்னவுரு. " 3. 71 - 4.
|