400
 

பலகையின் மேலும் மகர முறையாக வரைந்து, முன்னெழுதிய ஏட்டினையும் அதன்மேல் வைத்து வசியமென்னும் கவர்ச்சி அமைதற்பொருட்டு, அம் மந்திரத்தினை எண்பதினாயிரம் எண் திருவுரு ஏற்றுதல் வேண்டும். திருவுரு ஏற்றுதல் என்பது சிவம் பண்ணுதல் என்பதாகும். இதனைச் செபம் பண்ணுதல் எனவும் கூறுவர்.

(அ. சி.) வில்லம் - வில்வம்.

(84)

978. எண்ணாக் கருடணை ஏட்டின் 1யகாரமிட்
டெண்ணாப் 2பொன்னொளி எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவற் பலகையி லிட்டுமேற் கேநோக்கி
எண்ணா வெழுத்தோடெண் ணாயிரம் வேண்டிலே.

(ப. இ.) கருடணை என்று சொல்லப்பெறும் ஒப்பாம் நிலைமை எய்துதற்கு வழி யாதென நாடின் ஓலையில் யகார முதலாக மாறி அமைத்து அவ் வைந்தெழுத்தினையும் எழுதி, கருதுதற்குரிய வியாழக்கிழமையில் அவ்வோலைமேல் வெண்ணிறமான ஒருவகைப் பொடியினைப் பூசி வெண்நாவல் பலகையின்மேல் அதனை வைத்து, மேற்குநோக்கியிருந்து கொண்டு, நெஞ்சின்கண் ஒருமிக்க எண்ணாயிரம் எண் உருவேற்றுதல் வேண்டும். எண்ணுதல் - சிந்தித்தல்; நாடுதல். 973 நின்ற என்பது முதல் இத் திருமந்திரம் முடியத் தம்பன முதலாகக் கருடணை ஈறாக ஓதப்பெற்றுள்ளன.

(அ. சி.) யகாரமிட்டு - யகரத்தை மாறி. பொன் நாள் - வியாழம். எழுவெள்ளி - வெள்ளிபற்பம்.

(85)


3. அருச்சணை

979. அம்புய நீலங் கழுநீ ரணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரந்
தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

(ப. இ.) தாமரை, கருங்குவளை, செங்கழுநீர், நெய்தல், பலா, மாதவி, மந்தாரம், தும்பை, மகிழ், சுரபுன்னை, மல்லிகை, செண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய பதினான்கு வகையான நறுமணமிக்க பூக்களைக் கொண்டு வழிபாடு செய்வாயாக. மாதவி - குருக்கத்தி. வகுளம் - மகிழ். அருச்சனை - வழிபாடு. ('ஆரா தனையே வழிபா டருச்சனை' பிங்கல நிகண்டு. 1799.)

(அ. சி.) மாதவி - குருக்கத்தி. வகுளம் - மகிழ்.

(1)


1. (பாடம்) அகாரமிட்

" உகாரமிட்

2. பொன்னாளில்