418
 

கும். வம்பு - கச்சு. ஆரம் - முத்துமாலை. தனத்தி - முலையாகிய மார்பினள். சுகம் - இன்பு. மதி - மெய்யுணர்வு.

(அ. சி.) வம்பார - கச்சு, மாலை அணிந்த. சுகோதயள் - சுக உற்பத்திக்குக் காரணம் ஆனவள். வத்துவம் - மாயை.

(8)

1029 .அவளை யறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி யூர்புகு மாறறி யேனே.1

(ப. இ.) திருவருளாற்றலை உணராத தேவர்களும் இலர். திருவருள் துணையின்றிச் செய்யும் சீரிய தவமுமில்லை. அவள் துணையின்றி அருந்தவப்பேற்றால் படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்யும் ஐங்கடவுளராலும் ஆவதொன்றில்லை. அவள்தன் அருள் துணையில்லாமல் திருவடிப்பேறு கைகூடச் செய்யும் செந்நெறியும் இல்லை.

(அ. சி.) ஐவர் - ஐந்து ஆதார மூர்த்திகள். ஊர்- முத்தி உலகம்.

(9)

1030 .அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா2 ரறிவுரு வாமவள் என்பர்
அறிவார் கரும மவளிச்சை என்பர்
அறிவார் பரனு மவளிடத் தானே.3

(ப. இ.) திருவடியுணர்வு கைவந்த மெய்கண்டார் அருளம்மையின் திருவுரு பேரின்பம் என்பர். அறிவுரு எனவும் கூறுவர். ஐந்தொழிலும் அவளது விழைவாகிய திருவுள்ளம் என்பர். விழுமிய முழுமுதற் சிவனும் அவளிடமாகக் கொண்டு திகழ்பவன் என்பர். ஆனந்தம் - பேரின்பம். இச்சை - விழைவு. மெய்கண்டார்: செம்பொருட்டுணிவினர்.

(அ. சி.) சத்தி, சிவம் வேறின்றி உள்ள நிலையைக் கூறிற்று இம் மந்திரம்.

(10)

1031 .தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி
ஊன்எங் குளதங் குளன்உயிர்க் காவலன்
வானெங் குளதங் குளமந்த மாருதம்
கோனெங்கும் நின்ற குறிபல பாரே.4

(ப. இ.) தான் என்று சொல்லப்படும் அச் சிவபெருமான் எங்கெலாம் உளன் அங்கெலாம் தையல் மாதேவியாகிய திருவருளம்மையும்


1. அயன்றனை, சிவஞானசித்தியார், 1. 3 - 1.

2. (பாடம்) ரருவுரு

3. சத்திதன். " 1. 3 - 3.

" அருண்டாம். சிவஞானபோதம், 5. 2 - 3.

4. அல்லல். திருக்குறள், 245.