முதலிற் காணப்படும் நடப்பாற்றலாகிய நகரத்தின் முதல்வியாவள். ஆருயிர்கள் வினைக்கீடாகப் பிறந்துழலும் உலகங்கள் பதினாலும் அவளுடைய அருளாணைவழி நிகழ்கின்றன. ஆதலால் அத் திருவருளையே உயிர்வித்தாகக் கொண்டுரைப்பர். சிவவுலகங்களும், மனமும் இறுப்பாகிய நற்புத்தியும் அத் திருவருள் ஆணை வழிநின்று நிகழ்கின்றன. அத் திருவருளே சிவ நிலைத்தன்மையுமாகும். இது, சிவயநம என்பதன்கண் இரண்டாம் எழுத்தாகக் காணப்படும் வனப்பாற்றலாகிய வகரத்தின் முதல்வியாகும். உலகியலில் உயிர்களைத் தான் முன்நின்று நடத்துவதால் தான் முதலில் விளங்குகின்றனள். வீட்டியலில் ஆருயிர்களைச் சிவத்துடன் கூட்டி இன்புறுத்தலின் இன்பம்தரும் சிகரத்துக்குப்பின் இரண்டாவது விளங்குகின்றனள். இதற்கொப்பு உலகியலில் விருந்தினரை அழைத்து வருங்கால் முன்னும், ஊட்டுங்கால் பின்னும் இல்வாழ்வார் நின்று சிறப்புச் செய்வதாகும். (அ. சி.) உயிர்வித்து - உயிர்களின் உடல் கருவிகளுக்குக் காரணம். பதினாலும் - பதினான்கு உலகங்களும். (30)
6. வயிரவி மந்திரம் 1051. பன்னிரண் டாங்கலை யாதி பயிரவி தன்னில் அகாரமு மாயையுங் கற்பித்துப் பன்னிரண் டாதியோ டந்தம் பதினாலுஞ் சொன்னிலை சோடச மந்தமென் றோதிடே. (ப. இ.) பன்னிரண்டு கலைவடிவான ஆதி வயிரவி இடமிருந்து அகாரமாகிய ஓசையும் மாயையாகிய ஒளியும் கூட்டி நினைந்து நோக்கக் கலை பதினான்காகும்; இப் பதினான்கும் புகழ்ந்து சொல்லப்படுகின்ற அம்மையின் இருப்பிடம். திங்களின் கலை பதினாறும் செல்வியின் சிறந்த இருப்பிடமாகும். ஓசை - ஒலி வடிவம். ஒளி - வரி வடிவம். சோடசம் - பதினாறு. (அ. சி.) பன்...ரவி - ஆதி பயிரவியின் கலை 12. அகாரமும் மாயையும் - அகரகலையும் மாயையின் கலையும் சேர்ந்து 14 கலைகள். (1) 1052 .அந்தம் பதினாலும் அதுவே வயிரவி முந்து நடுவும் முடிவும் முதலாகச் சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி அந்தமும் ஆதியு மாகிநின் றாளே.1 (ப. இ.) வயிரவியின் இருப்பிடம் முன் ஓதிய பதினான்கு கலையாகும் முதல் நடு இறுதியாகத் திகழ்பவள். நெஞ்சத் தாமரையிடத்து விளங்கும் பேராற்றல். அந்தமும் ஆதியும் ஆகிநின்றனள். இஃது, ஒடுக்கத்தையும் தோற்றத்தையும் செய்விக்கும் உரிமை உடையவள் என்பதாம்.
அவனவள். சிவஞானபோதம், 1.
|