431
 

காரண மந்திரத்தை இடையறாது ஓதும் மெய்யடியார்களது நெஞ்சத் தாமரையின்கண், உட்கொளல் நிறுத்தல் விடுதல் என்னும் உயிர்ப்புப் பயிற்சிக்குத் துணையாக திருவருளம்மை எழுந்தருள்வள். அங்ஙனம் எழுந்தருளும்போது நாரணி என்று பெயர்பெறுவள். சிவபெருமான் அருளிச் செய்த மறை நூலின் முதலும் முடிவுமாய் விளங்குவதும் திருவருளம்மையேயாம். பூரணம் - மூச்சை உட்கொளல். கும்பம் - நிறுத்தல். இரேசம் - வெளி விடுதல். நந்தி - சிவபெருமான். பூரகம், கும்பகம், இரேசகம் என்பன பூரணம், கும்பம், இரேசம் என நின்றன.

(அ. சி.) பூரணம் - பூரகம்.

(14)

1065 .அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி யுரைசெய்யுஞ்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவமுரைத் தானே.1

(ப. இ.) அந்தத்தைச் செய்யும் கடவுளாகிய சிவபெருமான் நடுவிரலாகவும், படைத்தலைச் செய்யும் ஆதியாகிய நடப்பாற்றல் சிறு விரலாகவும் கொண்டு ஓதும் உலகியல் 'நமசிவய' என்று ஆகும். இம் முறையினை ஊனநடனம் என்ப. இதனைமாற்றி யுரைசெய்தலாவது சிறுவிரல் முதல் பெருவிரலீறாகச் 'சிவயநம' என்று ஆகும். இது ஞான நடம் என்ப. இம்முறையில் முன் சிறப்பாகிய சிகரம் நின்ற நடுவிரலிடத்து யாப்பாகிய யகரம் நிற்கின்றது. இதுவே அடியார் நடுவுள் என்னும் குறிப்பாகும். இவ்வைந்தெழுத்தும் இம்முறைவைப்பும் செந்தமிழுக்கே உடைய சிறப்பென்பது விளங்கச் 'செந்தமிழாதி தெளிந்து' என்று ஓதியருளினர். அங்ஙனமிருந்தும் ஆரியமொழிமயலினர் ஐந்தெழுத்து ஆரியமொழியென்று சீரியலழித்துக் கூறுவர். இவ்வைந்தெழுத்தால் வழிபடுமுறையினைச் சிவபெருமான் அடியேன் வழியும் புதுப்பித்து உரைத்தருளினன். இதனை - வழிபடு இம்முறையினை. நவம் - புதுமை. இத் தமிழ்மறை ஏனைய மந்திரங்கள் போலாது. நடுவிரலைத் தொட்டு ஆழிவிரல் சிறுவிரல் பெருவிரல் சுட்டுவிரல் வரை ஐந்தெழுத்து மறைகூறித் தொடுதலென்பாரும் உளர்.

(அ. சி.) இம் மந்திரம் "அஞ்செழுத்து" தமிழ் என்றும், சமயம் முதலிய தீக்கைகளைப் பெற்றவர்கள் நடுவிரல் அடி முதற்கொண்டு சுண்டுவிரலுக்கு வந்து ஓங்கார உருவமாய் விரல்களின் வரைகளைக் கொண்டு ஐந்தெழுத்தைக் கணிப்பதைக் கூறுகின்றது. நடுவிரல் ஆதி - நடுவிரல் அடி.

(15)

1066 .உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த விராசி நெடுமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமஞ்செய் தானே.


1. ஊன. திருவருட்பயன், ஐந்தெழுத்தருள்நிலை, 3.

" உடையா. 8. கோயின்மூத்த, 1.