536
 

(ப. இ.) மூலாதாரத்தில் எழுந்த ஓங்காரத்தின் வகையாகிய அகர உகரங்கள் ஓங்காரத்தின் விரியாகிய அருள் வெளிக்கண் தோன்றிய 'சிவயநம' என்று திகழும். அருள்வெளியில் தோன்றி அவ் வருண் மறை உச்சித்தொளையிலும் எழுந்து விளங்கும். அது வேறெங்கும்காண ஒண்ணாதது. வரிவடிவாகக் கண்ணுக்கு காட்சிதர வந்தது. அங்ஙனம் வந்தது அத் தமிழ் மறையினை உணர்வில் உணர்தற் பொருட்டேயாம். மண் - மூலாதாரம். விண் - அருள்வெளி. கண் உச்சித்தொளை. காட்சி - கண்ணுக்குப் புலனாதல்.

(அ. சி.) மண்ணில் - மூலாதாரத்தில். விண்ணில் - ஆஞ்ஞையில். கண்ணில் - பிரமரந்திரத்தில். கண்ணில் எழுந்தது - தோன்றியது.

(88)

1382. என்றங் கிருந்த அமுத கலையிடைச்
சென்றங் கிருந்த அமுத பயோதரி
கண்டங் கரமிரு வெள்ளிபொன் மண்ணடை
கொண்டங் கிருந்தது வண்ணம் அமுதே.1

(ப. இ.) புருவமத்தியில் காணப்படும் திங்கள் மண்டலத்துள் வீற்றிருந்தருளும் அம்மை அருளமுத முலையினள் அவளுடைய திருக் கழுத்து வெண்ணிறம். திருக்கை பொன்னிறம். அத் திருக்கையினிடத்து மண்ணாலாகிய சிரகம் விளங்கும். அத் திருவருள் அம்மையின் நிறம் வெண்மை நிறமாகும். சிரகம் - கமண்டலம். அமுதம் - வெண்மை. மண்ணடை - சிகரம்.

(அ. சி.) அமுதபயோதரி - அமுதேச்சுரி. மண்ணடை. மண்ணாற் செய்த கமண்டலம்.

(89)

1383. அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழு முள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெமுதம தாகிய கேடிலி தானே.

(ப. இ.) திருவருளம்மை அமுதம் போலும் வெண்மை நிறம் பொருந்திய திருமேனியை யுடையவள். கருதுவார் கருத்தினுள் பளிங்கு போன்று வெண்நிறமாகத் தோற்றமருள்வள். குமுதம் போன்ற குளிர்ந்த பருத்த முத்துமாலை அணிந்தவள். என்றும் ஒன்று போல் நின்று நிலைப்பவள். அதனால் கேடிலாதவள் என்று அழைக்கப்படுவள். குமுதம் - வெள்ளாம்பல். கெமுதம்: கெழுமுதம் - பொருந்திய: இடைக்குறை. கேடிலி - அழிவிலாதவள்.

(அ. சி.) படிகம் - பளிங்கு நிறம். குமுதம் - அல்லி. கெமுதம் பொருந்திய.

(90)

1384. கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும்
பூவிலி பூவிதழ் உள்ளே யிருந்திவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.


1. சுடர்த்தொடீஇ. கலித்தொகை, 51.