600
 

நன்னெறியாம் சன்மார்க்கத்திற்குப் பயன் உயிர்களின் செவ்விக்கேற்ப ஊட்டும் சிவப்பேறேயாம். எல்லா வுயிர்களையும் அவ்வவ்வுயிர்களின் செவ்விக்கு ஏற்பப் பயனளித்து ஆட்கொள்பவன் திருவருளம்மையே.

(அ. சி.) ஆமாம் வழி - சரியான மார்க்கம் - அவ் வேறுயிர் - மலபரிபாகம் பெற்ற சீவர்கள்.

(6)

1538. அரனெறி யாவ தறிந்தேனும் நானுஞ்
சிரநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.1

(ப. இ.) அரனாரால் அருளிச்செய்யப்பட்ட நெறிகளை அறிந்த நானும், தலைமையாகிய நன்னெறியினை நாடியலைந்த நாளிலும் மிகவும் வன்மையாகிய காமம் வெகுளி மயக்கம் போன்ற குற்றக்கடலுள் மனம் அழுந்தி நின்ற அக் காலத்து அக் கடலினைக் கடந்து கரையேறுவதற்கு வேண்டிய முறைமையான சிறந்த நெறியினைத் தந்தருளிய நாளிலும் என்னைவிட்டு நீங்காது உடனாக நின்றருளியவள் திருவருளம்மையே.

(அ. சி.) நன்னெறி உணராது வேறு நெறிகளில் அலைந்து திரிந்த காலத்திலும் கூடவே இருந்து மலபரிபாகம் வருவித்துச் சன்மார்க்கத்தில் கூட்டியதும் சிவசத்தியே என்று கூறுவது இம் மந்திரம்.

(7)

1539. தேர்ந்த அரனை அடைந்த சிவனெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்கவ் வருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி யாமே2

(ப. இ.) திருவருளம்மையால் உணர்த்தவுணர்ந்த சிவபெருமானையடைந்த நன்னெறியானது, சிவநெறியைக் கைவிட்டு வேற்று நெறியிற் சென்றலைந்து பருவம் எய்தலும் மீண்டும் சிவனெறியைக் கருதி வந்தவர்க்கும் இடந்தரும் பெருவழி. ஏனைய நெறிகளினின்று ஒழுகி அவ்வப்பயன்களை அண்டமாகிய அவ்வவ் வுலகங்களிற் சென்று நுகர்வர். நுகர்ந்தபின் மீட்டும் திருவருள் நெறியாகிய சிவனெறி புகுந்து அந்நெறி ஒழுகி இறவா இன்பப் பேறெய்துவர். இவையனைத்தையும் உடனிருந்து உதவியருள்பவள் திருவருளம்மையே. "புண்ணியனை வையம் புகழ்ந்தவாறாம் புகழ்நூல்" அருளிச் செய்த நால்வருள், தேவாரம் அருளிய மூவருள் நடுவராம் முதல்வர் திருநாவுக்கரசு நாயனார். அவர் புறச்சமயம் புக்கு அருளால் மீண்டும் சித்தாந்தசைவப் பெருநெறி வந்து பெரும்பேறெய்தி நம்மையெல்லாம் ஆட்கொண்டருளியமை இதற்கொரு சாலும் கரியாகும். சாலும்கரி - போதுமான சான்று.

(அ. சி.) தேர்ந்து அவ் அரனை அடைந்த - திருவருட் சத்தி உணர்த்த அறிந்து அடைந்த. பேர்ந்து - விலகி. உன்னி - உண்மை


1. ஆதி. 12. சம்பந்தர். 129.

2. போற்றுங். அப்பர். 4. 101 - 7.

" ஓதுவித் " 4. 99 - 1.