சிவனை உள்ளம் தழுவுதலால் என்றும் பிரியா ஒருவனாம் சிவனைக் கண்டு கொண்டின்புறும். (அ. சி.) கள்....காணுமே - தவசிகள் உலக அனுபவங்களில் அழுந்தி நின்றாலும் உள்ளம் சிவனைவிட்டு அகலாது. (4) 1602. கரந்துங் கரந்திலன்கண்ணுக்குந் தோன்றான் பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்.1 அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான் விரைந்து தொழப்படும் வெண்மதி யானே. (ப. இ.) பற்றுடையவர்களுடன் பற்றற்ற சிவனும் விரவிப் பாலில் நெய்போல் மறைந்து நிற்கின்றனன். அங்ஙனம் நிற்பினும், பற்றற்ற மெய்யடியார்கட்கு வெளிப்பட்டுத் தோன்றியருள்வன். அவனே பொன் போலும் விரிந்த பின்னல் திருச்சடையினையுடையவன். அவன் பொன் போலும் மேனியன். திருவருள் துணையால் அருந்தவம் ஆற்றிய செந்தமிழ்ச் சிவனார்முன் விளங்கி நிற்பன். செந்தமிழ்ச் சிவனார் - மெய்யடியார். அத்தகு மெய்த்தவத்தோரே அச் சிவனாரின் இயற்கை உண்மை அறிவின்ப நிலையினை உணர்வர். ஆகையால் வாலறிவனாகிய வெண்மதியினைக் காலமுண்டாகவே காதல் செய்து உய்தலும், வேண்டினுண்டாகத் துறத்தலும்போன்று விரைந்து தொழுதல் வேண்டும். (5) 1603. அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.1 (ப. இ.) சூழ்ச்சிமிக்க அமைச்சரும், பெருமைமிக்க யானைக் கூட்டங்களும் ஆற்றல்மிக்க அரசரும் பகைத்தெழுந்து செய்த பெரும் போரில் இருதிறத்தாரும் எண்ணிறந்தாராய் மாண்டனர் அப் போர்நடுவே நின்று காண்பார்க்கு நிலையாமை உணர்ச்சியும், திருவடியுணர்வும், சிவப்பேற்றின்கண் ஆத்தமாகிய நேயமும் இயல்பாக வுண்டாகும். அந் நோக்கல் நோக்காகிய கருத்தினை மறந்து அழியாதிருந்தார் இறவாத நற்றவம் செய்தோராவர். (அ. சி.) இம் மந்திரம் பெரிய வல்லரசுகளும் பகைத்தெழுந்து, சண்டையுட்பட்டு, மாண்டு ஒழிவதைக் கண்டு அச் சமயத்தில் ஏற்படும் ஞானத்தால் அறிவுடையோர் தவத்தை மேற்கொள்வர் என்றது. அத்தம் என்பது ஆத்தம் என்று ஆயிற்று. அத்தம் - சமயம். (6) 1604. சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது 2மறித்துள்ளே நோக்குமின் பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல் ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.
1. செம்பொ. அப்பர், 5. 32 - 5. " விழித்தகண். திருக்குறள், 775. 2. சாத்திரம் பல. அப்பர், 5. 60 - 3. " ஆர்த்தபிறவித், 8. திருவெம்பாவை, 12.
|