10. திருநீறு 1637. நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர் ஓரொன் றிரண்டினில் ஓங்காரம் ஓதிலே.1 (ப. இ.) அகநிலையையுணர்த்தும் புற அடையாளங்கள் நூலும் சிகையும் என்று உணராதார் பெருமூடராவர். நூலென்பது மறை முடிவாம் 'சிவய நம' வாகும். நுண்ணிய சிகை என்பது அச் சிவய நம என்னும் மந்திரப்பயனாம் திருவடியுணர்வாகும். அதுவே சிவஞானமாம். அச் சிவஞான ஒழுக்கத்தில் நிலைநிற்போர் அந்தணராவர். பார்ப்பாராகிய மெய்கண்டார் ஓங்காரத்தின் கண் (952) உகரம் புரமாகவும், அகரம் உயிராகவும் கொள்வர். இனம்பற்றி மகரம் தளையாகவும் கொள்ளப்படும். மெய்கண்டார்: சித்தாந்தச் சைவ மாணவர். (அ. சி.) பாலொன்றும் - ஒழுக்கமுள்ள. பார்ப்பார் - உணருவார். பரம் - சிவம். (1) 1638. கங்காளன் 2பூசுங் கவசத் திருநீற்றை3 மங்காமற் பூச மகிழ்வாரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே. (ப. இ.) அயன், அரி என்னும் இருவர்தம் முழு எலும்புக் கூட்டினைச் சுமக்கும் சிவபெருமான் கங்காளன் எனப்படுவன். அவன் ஆருயிர்கள் உய்வதற்குக் காவலாயுள்ளது - திருவெண்ணீறு என்றுணர்த்தக் கவசமாக அத் திருவெண்ணீற்றை அணிந்துகொள்கின்றனன். அத் திருநீற்றை எப்பொழுதும் மங்காமல் பூசுதற்கு மகிழ்வாரிடம் எத்தகைய வினைத் துன்பங்களும் தங்கா; சிவநிலையும் சாரும் - அழகிய திருவடிப்பேறும் கைகூடும். (அ. சி.) திருவடி. சாயுச்சிய முத்தி. (2) 1639. அரசுட னாலத்தி யாகும்அக் காரம் விரவு கனலில் வியனுறு மாறி நிரவயன் நினமலன் தாள்பெற்ற நீதர் உருவம் பிரமன் உயர்குல மாமே.4
1. கோலும். அப்பர், 5. 39 - 8. " காதலாகிக் சம்பந்தர், 3. 49 - 1. 2. நங்கா. 8. திருச்சாழல், 11. 3. ஆறுலவு. 12. சம்பந்தர், 43. " சிவசிவ. 10. திருமந்திரம், 2667. 4. குலம்பொல்லேன். அப்பர், 6. 95 - 8. " சாத்தி. " 5. 60 - 3. " சீல. 12. சண்டேசுரர், 21.
|