656
 

(ப. இ.) நிலைப்பும் அறிவும் உள்ளனவாகிய சிவமும், நிலையில்லனவும் அறிவில்லனவும் ஆகிய காரியமல கன்ம மாயைகளும் குரு வருளால் நினைந்து மலப்பிணிப்போடு கூடிய அறிவுப் பொருளாகிய ஆன்மாவை, அப் பிணிப்பின்றும் வேறுபடுத்திச் சிவபெருமான் திருவருள் கைகாட்டுதலால் முழுக்காதலாம் பத்தியினால் திருவடியுணர்வு பெறுவர். பெறவே, இடையறா வணக்கம் புரிவர். திருவடிப் பேரின்பத் தின்கண் அன்புமீதூரும். அத்தகையோன் நன்மாணவன் ஆவன். காரணமல கன்மமாயைகள் நிைலைப்புள்ளன. ஆனால் அறிவில்லன. கைகாட்டல் - துணைபுரிதல். தகுவோன் - தகையோன்.

(அ. சி.) சித்தை உருக்கி - பாசத்தொடு கலந்த சித்துருவனான ஆன்மாவை வேறுபிரித்து. ஆனந்த சத்தி - முத்தி.

(8)

1670. அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே.

(ப. இ.) சிவகுருவே இப்பொழுதே உன் திரவடியை அடியேன் முடிமீதே வைத்தருள் என்று உள்ளன்புடன் நினைந்தால், தொன்மையை புல்லிய ஆணவல்லிருளும் துன்பத்திலே முடியும் மாயப்பிறவியும் யாவற்றையும் ஆதியாய் நின்று தொடங்கி இயக்கியருளும் அறிவுப் பெரு வெளியில் திகழம் திருவருளம்மை அருளால் அவை முற்றும் அகலும். அகலவே திருவடிஞானம் பெற்ற திருவாளனாவன். அவனே குற்றமற்ற நற்றவனாவன்.

(அ. சி.) இன்று உன்னா - இப்பொழுது நினைத்து. அடிவைத்த - தொடங்கிய. காய - பரம ஆகாய. அடிபெற்ற ஞானம் - நிலைத்த ஞானம். ஆசு - குற்றம்.

(9)

1671. சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன்
ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே.

(ப. இ.) திருவடிப்பேற்றிற்கு உரித்தாய சிவஞானத்தில் ஆராக் காதல் மீதூர குருபரன் திருவடியில் ஏனையார்க்கு வாராத பெருங்காதல் உண்டாகும். குருவருளான் அன்றி எய்தப்பெறாத திருவடிப்பேற்றிற்குத் துணையாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்நெறி நான்மையும் கைகூடப் பெற்றோனாவன். சிவகுருவின் திருவடி முடிசேரச் சிவஞானச் செல்வம் சேர்ந்த சீரியோனாவன். ஏனையார் - அபக்குவர். சாதகம் - துணை.

(அ. சி.) வாராத காதல் - அபக்குவர்க்கு வாராத அன்பு. குருபரன் பாலாக - குருவினிடத்து உண்டாக. சாதக நான்கும்- சரியையாதி நான்கும் அடிவைக்க - குருவானவர் திவடி தீக்கை செய்து உபதேசிக்க

(10)