720
 

(அ. சி.) திருமுகமாய்விட்ட - அடியார் வடிவமாகத் தோன்றிய.

(7)

1828. அழிதக வில்லா அரனடி யாரைத்
தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுதுப டாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத் தோரின்ப மாமே.1

(ப. இ.) அழியுந் தன்மையில்லாத அருட்பண்புகளை மேற்கொண்டொழுகும் சிவனடியாரை இவ் வையத்துள்ள மெய்யடியார் கண்ணிற்காணும். சிவன் எனக் காதலாற் றொழுவர். அதனால் அவர்கள்பால் பண்டே புல்லிய மலவிருள் நீங்கும். தொழாத நாள் இல்லையென்று சொல்லும்படி அம் மெய்யடியார்களைச் சிவனெனவே நாடித் தொழுதெழ ஒப்பில்லாத சிவப்பேரின்பம் பின்னையென்னாது அப்பொழுதே உண்டாம்.

(அ. சி.) பண்பனை - சிவ வடிவத்தையுடைய மகேசுரனை.

(8)

1829. பகவற்2கே தாகிலும் பண்பில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே.

(ப. இ.) அம்மைக்கு ஒருகூறு பகுந்தளித்ததனால் அப்பனாகிய சிவபெருமான் பகவன் என்று அழைக்கப்பட்டான். அவனை யுணர்தற்கு வேண்டும் உலகியற் பண்புகள் ஏதும் இலராகிலும், மெய்யடியார்கள்மாட்டுப் பூண்டுள்ள அளவிறந்த அன்பாகிய மத்தராய் நின்று பூசனைக்கு வேண்டிய முகமனாகிய சிறப்புடன் வழிபாடு செய்வர். அவ் வழிபாட்டின் பயனாய் ஊழி ஊழியாக நின்று உள்ளத்தை அதற்கே ஈந்தவராய் வேறு ஆராய்வு ஏதுமின்றி அடங்கி நிற்பர்.

(அ. சி.) பண்பு இலராகி - அன்பு இல்லாராகி. மத்தராய் - மயக்கம் உடையராய். முகமத்தோடு - உபசாரங்களோடு. அகம் மத்தராகி - மதி மயங்கினராய்.

(9)

1830. தாழ்விலர் பின்னும் முயல்வ ரருந்தவம்
ஆழ்வினை யாழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுல காமே.

(ப. இ.) சிவனடியார் வழிபாட்டின் அன்பில் ஒரு சிறிதும் குறை பாடிலராய், மேலும்மேலும் சிவத்தைப் பேணும் இறப்பில் தவத்தால் ஆழச்செய்யும் ஏறுவினை அகன்றொழிய, மெய்யடியார் திருவடியினை வழிபட்டு மண்ணினிற் பிறந்தார் எய்த வேண்டிய பெரும்பயனை


1. உன்னி, அப்பர், 5. 38 - 2.

2. அகரமுதல. திருக்குறள், 1.

" பரஞானத், சிவஞான சித்தியார், 11 - 2.