723
 

வாயில் ஐந்தவித்தான்' என்னும் பொருவில் பண்பு. இத்தகைய அண்ணல் பெருமையை சிவகுருவால் ஆய்ந்தறிவதே பிறப்பற்ற பெரு நிலையாம் சிறப்பு. மூப்பு - சிறப்பு. இது, 'திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்,' 'கோயின் மூத்த திருப்பதிகம்' என்பனவற்றான் உணர்க.

(அ. சி.) மூடத்துள் - மனத்தின்கண் உள்ள உள்ளத்தினுள். மூப்பே - அனுபவமே.

(5)

1836. இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுல காள்வர்
புயங்களு மெண்டிசை போதுபா தாள
மயங்காப் பகிரண்ட மாமுடி 1தானே.

(ப. இ.) ஓவாது சுழலும் இவ்வுலகினில் சிவபெருமானின் திருவடியுணர்வு கைவரப்பெற்ற சிவனடியார்கள் செந்நெறியிற் செல்வர்; சிவ உலகை ஆள்வர். அச் சிவபெருமான் திருத்தோள்கள் புலம் எட்டிலும் நலம்புரிய எட்டாயின. போதாகிய அவன் திருவடித் தாமரை பாதாளம் ஏழினுக்கும் அப்பால்; திருமுடி. வெளியில் திகழும் புறவண்டங்களுக்கும் அப்பாலாம்.

(அ. சி.) மயங்காவழி - ஞான வழி. போது - திருவடி.

(6)

1837. அகம்படி கின்றநம் ஐயனை யோரும்
அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார்
அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.

(ப. இ.) மறவா நினைவுடைய உள்ளத்தில் வீற்றிருந்தருள்கின்ற முழுமுதற் சிவனை, மனவடக்கங்கொண்டு கொல்லாமை முதலிய எண்பெரும் பண்பு (1804) மலர்களைக் கொண்டு நாளும் வழிபடும் மெய்யடியார் பிறப்பு, இறப்பு ஆகிய பேரல்லலில் சேரார். தம் முனைப்பாம் அகங்காரம் அருளாலடங்கப் பெற்றார் நுண்ணுடலின் மெய்ம்மையை யுணர்வர். அத்தகையோர் எட்டுறுப்பால் ஆகிய நுண்ணுடலை யறிந்து நீங்கவல்லாராவர். நுண்ணுடல்: தன் மாத்திரை ஐந்து, மனம் எழுச்சி இறுப்பாகிய உட்கலன் மூன்று ஆக எட்டு. ஓரும்; அசை.

(அ. சி.) அகம் படிகின்ற - உள்ளத்தின்கண் வீற்றிருக்கின்ற. அகம்படி கண்டவர் - ஆங்காரம் அடங்கியவர்.

(7)

1838. கழிவு முதலுங் காதற் றுணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியுமென் னாவி யுழவுகொண் 2டானே.


1. கண்காள். அப்பர், 4. 6 - 2.

" திருவுடைப். 12. திருஞானசம்பந்தர், 846.

" ஏழுடையான். 8. திருக்கோவையார், 7.

2. செய்யுஞ். திருக்களிற்றுப்படியார், 21.