746
 

எனினும் வித்தும் முளையும் குவளையும் பாலும்போன்று வெவ்வேறாவன. அடங்கியிருக்கும் அம்முளை அவ்வித்தின் வாயிலாலன்றி வேறு வாயிலாக வெளிப்படுமாறில்லை. அவ்வித்தும் முளையும் இரு கைபோல வெவ்வேறாகத் தோன்றும் இருபொருளும் அல்ல. கையும் விரலும் போன்று ஒட்டி உடனாகத் தோன்றும் இருபொருளுமன்று. மலர் மணம்போல அடங்கித் தோன்றும் இருபொருளாம். அதுபோல் விந்துவாகிய தூமாயை திருவருளாற்றலாம் நிலைக்களத்து அடங்கி அவ்வாற்றலால் தொழிற்படும் இதுபோன்று சிவனார் திருவருள் தாரகமாம் நிலைக்களத்து மாயை தொழிற்படும். அதனால் மாயையும் திருவருளும் ஒன்றன்று வெவ்வேறாம். இதுவே அரனாரருளிய மெய்கண்ட செந்நெறி அல்லது சித்தாந்த சைவம். 'நம்மூலராற்போற்ற நால்வரால் நாட்டநிலை, செம்பொருள் சித்தாந்த சைவம் தேறு' என்பதனை நினைவுகூர்க. குவளை - பாற்கலம்.

(10)

1896. அருந்திய வன்ன மவைமூன்று கூறாம்
பொருந்து 1முடன்மனம் போமல மென்னத்
திருந்து முடன்மன மாங்கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம தாகுமே.

(ப. இ.) ஆருயிர்கள் அருந்திய சோறு மூன்று கூறுபடும். ஒன்று பருவுடலை வளர்க்கும் பகுதியாகும். மற்றொன்று நுண்ணுடலிற் காணப்படும் மனத்தை வளர்க்கும் பகுதியாகும். பிறிதொன்று சக்கையாய் மலமாய்க் கழியும் பகுதியாகும். ஆருயிர்கள் கட்டுள்ளடங்கிப் போக்கு வரவு புரிதற்கு நிலைக்களம் உடல். அதனை ஐவகையாகக் கூறுப. அவை வருமாறு: பருவுடம்பு, வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு என்பன. இவற்றை அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் எனவும் கூறுப. முன்னாட்களில் உண்ட உணவின் சாரம் பருவுடலாக மனவுடலாக வளர்ந்திருக்கின்றன. உழைப்பாலுடலழகாம் ஊணாலாமுள்ளம், மழையொழுக்கா லாமுயிரின் மாண்பு. என்பதனை நினைவு கூர்க.

(அ. சி.) முன்னாளிரதம் - முந்தின தினத்தின் உண்ட அன்ன இரசம்.

(11)

1897. இரத முதலான ஏழ்தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒருபுற் பனிபோல்
அரிய துளிவிந்து வாகுமேழ் மூன்றின்
மருவிய விந்து வளருங்கா யத்திலே.

இரதமாகிய சாரம் முதலாகச் சொல்லப்படும் ஏழ்முதற்பொருள்களால் ஆக்கப்பட்டதிவ்வுடல். தாது - முதற்பொருள். அவ்வேழும் வருமாறு: சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை, வெண்ணீர் என்பன. இவற்றை இரசம், இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை, சுக்கிலம் எனவும் கூறுப. இவற்றுள் சாரம், செந்நீர், வெண்ணீர் ஆகிய


1. மருவானந்தம். சிவஞானசித்தியார், 4. 2 - 23.