747
 

மூன்றும் ஓர்நாள் ஒருபுற்பனிபோல் திரளும். இத் திரட்சியே விந்துவெனப்படும். இவ் விந்து ஏழ்மூன்றாகிய இருபத்தொருநாள் வரை உடம்பில் வளரும்.

(அ. சி.) புற்பனி - புல் நுனிப்பனி. ஏழ் மூன்றின் - ஏழ் தாதுக்களில். இரதம், இரத்தம், சுக்கிலம் என மூன்றினும்.

(12)

1898. காயத்தி லேமூன்று நாளிற் கலந்திட்டுக்
காயத்துட் டன்மன மாகுங் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோ டழியுமே.

(ப. இ.) அதன்பின் மூன்றுநாள்காறும் பரந்து கலந்து முன் உடல்விந்துவாக விருந்த அது மனவிந்துவாக மாறும் அதனைக் கலையாகிய அறிவு விந்துவாக அமைத்துச் சிவன் திருவடியுணர்வாய் நீங்காது நின்றோர்க்கு அவ் விந்துவும் நீங்கா. பற்றறாமையின் உலக மயக்கில் ஈடுபடுவோர்க்கு அவ் விந்து மனத்துடன் அழியும். இதனையே கனவிற் கழிதல் என்ப.

(அ. சி.) நேயத்தே - சிவத்திலே.

(13)

1899. அழிகின்ற விந்து அளவை யறியார்
கழிகின்ற தன்னையுட் காக்கலுந் தேரார்
அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர்
அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே.

(ப. இ.) இங்ஙனம் அழிகின்ற வெண்ணீராகிய விந்துவின் அளவை அறியார். அவ்வளவு கூறுங்கால் எண்பது துளிச் செந்நீர் ஒரு வெண்ணீரின் ஒரு துளியாகும். இத்தகைய எண்பது வெண்ணீர்த் துளியே ஒரு முழுத்துளி விந்துவாகும். எனவே ஒரு துளி விந்து வீணா அழியின் ஆறாயிரத்துநானூறு துளிச் செந்நீர் அழிந்ததாகும். இதுபற்றியே 'கணக்கன் கோளன் காணி இழந்தான்' என்னும் பழமொழியும் வழங்குவதாயிற்று. கணக்கன்: ஒழுக்கம் வழக்கு இழுக்காது கைக்கொள்வோன். அது கருத்தாவாகுபெயராய் அவனால் ஆக்கப்படும் நூலைக் குறித்தது. அந் நூற்கு மாறுபட நடப்போன் கோளன் எனப்படுவன். காணி என்பது எண்பதில் ஒரு கூறு; எனவே அஃது எண்ணலளவை ஆகுபெயராய் விந்துவை உணர்த்தும். இழந்தான் - விந்துவை இழந்தான் என்பதாம். விந்து கழிவதால் வாழ்நாளும் உடலும் பாழாவதறியார். அப் பாழில் நின்று தன்னைக் காக்கவும் ஆய்ந்துமுயலார். நிலையில்லாது அழிகின்ற உடலத்து வீணாய் அழிந்து தளர்வுற்றோர், தங்கள் நாளும் அழிகின்ற தன்மையை அறிந்து அவற்றினின்றும் நீங்கி நல்வழிப்படரார். இடையிடையே கடைமுதலாக வருவனவாகிய திருப்பாட்டுக்களும் பலவுள. எடுத்துக்காட்டாக 1889 முதல் 1893 வரை யுள்ளவும், 1896 முதல் 1899 வரை யுள்ளவும் கடைமுதற்றொடை என்க. கடைமுதல்: அந்தாதி.(அ. சி.) ஒழியார் - ஆசையை ஒழியார்.

(14)