755
 

தோன்றும். அவற்றை நடுநாடி வழியாக நடத்தி அகத்தவ ஆசான் கூறியருளியபடி சென்று அவ் விந்துப்பாலாகிய அமிழ்தத்தினைப் பருகுவராயின் பற்றறப் பற்றினாராவர். பிறப்பிற்கு ஏதுவாம் மருள் முற்றும் மாயும். அவ் விந்துவும் அடங்கும்.

(அ. சி.) மேலாநிலம் - நிராதாரம். கோலால் - சுழுமுனையால். குறி - ஆசிரியன் கூறியபடி. மாலானது - போகமானது. மாளும் - கட்டுப்படும்.

(20)

1920. விந்து விளையும் விளைவின் பயன்முற்றும்
அந்த வழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தாற் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

(ப. இ.) விந்து துளிதுளியாகக் (1899) கூடி விளைகின்ற விளையும், விளைந்து முற்றினால் எய்தும் பயனும், உணர்ந்து அடங்குதல் நன்று. இம்முறையே எஞ்ஞான்றும் கைக்கொளின் நீண்டு வாழ்தல் நேரும். அங்ஙனமின்றி இணைவிழைச்சாகிய ஆண்பெண் கூட்டத்தினை விரும்பினால் அவ்விந்து வீணாய்க் கழிந்து வாழ்நாளை வீழ்நாள் ஆக்கும். இவற்றை யுண்மையாக வுணரின் விந்து அடங்கும். அவ் வடக்கத்தில் பேராக்கம் உண்டாகும். அடங்காதுவிட்டால் பெரும்போக்கு ஏற்படும். நாதத்தால் ஏற்படும் விந்துவின் சிறப்பும் அருளால் உணர்வார்க்கு விந்து அடங்கும் வெற்றியும் உண்டாகும்.

(அ. சி.) அழிவு - வெளிச்செல்லுதல். நந்திய - மிகுந்த.

(21)

1921. விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியி னாலே நயந்தெரித்
தந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

(ப. இ .) விந்துவென்று சொல்லப்படுகின்ற உயிர்வாழ் வித்தினைப் பொருந்திய மூலத்திடத்து விளங்கும் மூலஅனலால் செம்மையுறச் செய்து கொப்பூழ் முதல் நெஞ்சம்வரையுள்ள ஞாயிற்றுமண்டிலத்துக்கு வலப்பால் நாடிவழியாக ஏற்றி அதன்மேல் நெஞ்சமுதல் நெற்றிவரையுள்ள திங்கள் மண்டிலத்துக்கு இடப்பால் நாடிவழியாக ஏற்றி அத்திங்கள் மண்டிலச் சார்புறத் தண்மையும் வெண்மையுமிக்க வண்மை அமுதமாகும்.

(அ. சி.) வீசம் - வித்து. பானுவதி கண்டம் - சூரியன் இருக்கும் இடம் வலதுகண். சந்திரன் சார்பு - சந்திரன் இருக்குமிடம் இடதுகண் (வலது மூக்கு இடது மூக்குமாம்).

(22)

1922. அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மாள
அமுதச் சிவபோகம் ஆதலாற் சித்தி
அமுதப் பலாவன மாங்குறும் யோகிக்கே.