ஒரு ஞான்றும் உண்ணார்; என்னை, வித்தினும் விளைவே மிக்கபயன் தருவது ஆதலான். அதுபோல் சிவயோகியரும் வித்தாகிய விந்தினைப் பெண்பால் விடுதலாகிய குற்றினைச் செய்து தம் வாழ்நாள் குறைதலாகிய ஊணினையுண்ணார் விந்துவை அடக்கி நெடுநாள் வாழின் அந்நாள் காறும் உலகத்துப் பலகோடி மக்களுக்கு அவ்வியோகியர் பெரும் பயனாவர். அங்ஙனமின்றிப் பெண்பால் விந்துவினை விட்டு ஒருசில மக்களைப் பெற்றுத் தம் வாழ்நாளை வீணே மாய்த்து விரைந்து மாள்வதால் உண்டாம் பெரும்பயன் யாது? திருவருள் கைவரப்பெற்றுப் பொருவரும் அருள் நூலும் தெருள் நூலும் செய்தருளினார் வித்துக் குற்றுண்ணா விழுமிய வேளாண் சான்றோரேயாவர். விளைவறியாதவனே வித்துக்குற்றுண்பான்: அதுபோல் வித்துக்குற்றுண்ணாமல் வித்தாகிய விந்து வினைக் காமத் தீயால் பெண்பால் விடுத்து அதனைச் சுட்டுண்பான் வித்துக் குற்றண்ணும் வேளாளனினும் வேறல்லன். வித்தினைக் கட்டுப்படுத்தி அவ் விந்துவைப் பெண்பால் விடுத்து உண்ணாமல், தன்பால் நடுநாடி வழியாக மேலேற்றித் தன் உடற்கண் வித்து விதைத்தவன், விழுத்தவச் சிவயோகியாவன். வித்துக்குற்றுண்ணாமல் என்பதற்கு நெல்லின் விளைவின் மாண்புநோக்கி அதனை உண்ணாமல் போற்றியும் அதனினும் சிறந்த விந்துவைச் சுட்டுண்பவன் எனினும் ஆம். (அ. சி.) வித்துத்துக்குற்றுண்பான் - வித்துக்கு வைத்திருக்கும் நெல்லை குத்தி உண்பான். அதுபோல், விந்துவைக் கட்டிச் சுழுமுனையில் ஏற்றாமல் மாதரிடத்தில் செலுத்துபவன். (28) 1928. அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட வன்னத் திருவிந்து மாயுங்கா யத்திலே. (ப. இ.) உண்ணும் நல்லுணவால் ஏற்படும் விந்து தன் உடம்பகத்தே யோகப் பயிற்சியால் அடங்கும் வகையினைக் கண்டு, உயிர் நெடுநாள் நிலை பெறுமாறு அவ்விந்துவினைக் கீழ்நோக்கவொட்டாதுமேலேற்றி மின்னல் போலத் தோன்றி மாயும் இவ்வுடம்பகத்து - விந்துநாதம் இரண்டினையும் ஒன்றுகலந்து உடம்பகத்து ஆக்க அழகினையுடைய காரணகாரியமாகிய இருவகை விந்துவும் உடம்பின்கண் கட்டுப்படும். (அ. சி.) அன்....கண்டு - அன்னத்தால் உண்டாகும் விந்து. மின்.....காயத்திலே - விந்துவை நாத சத்தியின் உதவியால் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டால் நாதமும் விந்துவும் அழியும். (29) 1929. அன்னம் பிராணனென் றார்க்கு மிருவிந்து தன்னை யறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச் சொன்ன மாமுருத் தோன்றும்எண் சித்தியாம் அன்னவ ரெல்லாம் அழிவற நின்றதே. (ப. இ.) யார்க்கும் உண்ணும் உணவினாலும் நண்ணும் பயிற்சியாகிய உயிர்ப்பினாலும் உண்டாகும் இருவிந்துகள். அவ் விந்துவின் மாண்பினை அறிந்து தன் உடலகத்தே உண்டுகொள்வதாகிய தங்குதலைச்
|