775
 

23. பசு இலக்கணம்
பிராணன்

1968. உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயமென் றறிந்துகொண் டேனே.1

(ப. இ.) சிவபெருமான் 'அன்னியமின்றிச் செய்வோர் செய்திப் பயன் விளைத்துநிற்'பவன். அதனால், ஆருயிர்கள் அவனை நினைத்த அளவில் அவன் உணரும் ஒப்பில்லாதவனாகின்றனன். புகழ்ந்தெடுத்துச் சொல்லப்பெறும் செந்தமிழ்த் திருமாமறையினை ஆருயிர்களின் அகத்து நின்று பயிற்றுவிப்பவன் சிவபெருமான். அத்தகைச் சிறப்புவாய்ந்த அவன் என்னுள் எழுந்தருளியுள்ளான். என்னுள் நிலைத்துநிற்கும் சோர்விலாப் பேரொளிப் பெருவிளக்காக உள்ளவனும் அவனே. அவனது இயற்கைத் தன்மை பேரறிவுப் பெருந்தன்மையாகும். அவ்வுண்மையினை அவனருளால் அறிந்துகொண்டடேன். இக் குறிப்பு அன்னமயம் என்பதனால் பெறப்படும். அன்னம் 'நீரொழியப் பாலுண் குருகு' ஆதலால் அஃது அறிவின் நினைவுக் குறிப்பாகும்.

(அ. சி.) இளையா - சோர்வு படாத. அன்மையன் அன்றென்று - உடம்பினின்றும் வேறானவன் என்று.

(1)

1969. அன்ன மிரண்டுள ஆற்றங் 2கரையினில்
துன்னி யிரண்டுந் துணைப்பிரி யாதன்னந்
தன்னிலை யன்னந் தனியொன்ற தென்றக்கால்
பின்ன மடவன்னம் பேறணு3கா தன்றே.

(ப. இ.) ஆருயிரின் வாழ்க்கையை ஆற்றுநீருக்கு ஒப்பாகக் கூறுக. அது 'சிறைசெய்ய நின்ற செழும்புனலின் உள்ளம்' என்னும் மெய்கண்டார்தம் பொய்யில் தமிழால் விளங்கும். அத்தகைய வாழ்க்கை யுடலகத்து இரண்டு அன்னங்கள் துணைபிரியாதனவாய்த் துன்னி நிற்கின்றன. அவ் விரண்டனுள் ஒன்று தானே விளங்கும் பேரறிவுப் பெரும்பொருளாம் சிவபெருமான். மற்றொன்று சிவபெருமான் விளக்க விளங்கும் சிற்றறிவுச் சிறு பொருளாகிய உயிர். இவற்றை முறையே முற்றுணர்வுப்பொருள் சிற்றறிவுப்பொருள் எனவும் கூறலாம். வேறோராற்றான் விளக்கின் அறிவதும் அழுந்துவதும் என்றும் கூறலாம். அறிவது சிவபெருமான். அழுந்துவது ஆருயிர். ஒன்றே சிவமுதல்வன் உண்ணும் உயிர் பலவாம், அன்றே உளநீடமைவு என்பதனால் ஒன்றும்


1. கல்வி. நாலடியார், 135.

2. சிறைசெய்ய. சிவஞானபோதம், 8. 4 - 1.

3. நானவனென், " 10. 1 - 1.

" யாது மூரே. புறநானூறு. 192.