(ப. இ.) யாண்டும் பிரிப்பின்றிக் கலப்பால் ஒன்றாய் நிற்கும் சிவபெருமானும் ஆருயிரும் ஒன்றைவிட்டொன்றகன்று ஒன்றைத் தனித்துக் காணுதல் இயலாது. அஃது இடமும் இடத்து நிகழ்பொருளும் போல் கலந்து காண்பதன்றித் தனித்துக் காண இயலாத தன்மையினை யொக்கும். அம்முறையால் 'சீவனெனச் சிவனென்ன வேறில்லை' என்றதாகும். அதுவே அன்றிப் பொருளால் ஒன்றென்றதன்று. ஆருயிர் திருவருள் துணையில்லாமல் சிவனாரை அறியமாட்டா. இஃது ஒளியுடைக்கண் கதிரின் துணையின்றிக் கதிரவனைக் காணாமையை ஒக்கும். திருவருளால் ஆருயிர் பேருயிர்ஆம் சிவனாரை அறிந்தபின் ஆருயிர் பேருயிராகிய சிவனார் திருவடியில் அடங்கிச் சிவனாகவே இருந்து இன்புறும். (12) 1980. குணவிளக் காகிய கூத்தப் பிரானும் மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம் பணவிளக் காகிய பல்தலை நாகங் கணவிளக் காகிய கண்காணி யாமே. (ப. இ.) பேரின்பப் பேரொளியாய் என்றும் நின்று விளங்கும் கூத்தப்பெருமானும், மனமாகிய விளக்கினையுடைத்தாயுள்ள நிலைபெற்ற ஆருயிர்கட்கெல்லாம் கண்காணியாவன். ஈண்டு மனமெனப்படுவது இறுப்புமெய்யாகிய புத்திதத்துவமாகும். ஐந்தலை அரவின் படத்தின்கண் விளக்கந்தரும் மணிகள் உள்ளன. அவ் அரவின் கூட்டங்களைத் தன்னகத்துக்கொண்டு விளங்கும் சிவபெருமான் கூட்டமாகிய ஒளி விளக்கினன் எனப்படுவன். அவன் அறிவுக்கண்ணால் காணப்படும் கண்காணியாவன். கண் - கண்ணால். காணி - காணப்படுவது. காணி என்பதற்குக் காண்பது எனவும் பொருளுண்டு எனினும் ஈண்டுக் காணப்படுவது என்பது. இதுபோல் ஈண்டு மனமும் இறுப்பு மெய்யாகிய புத்தியினையே குறிக்கும். இக் கருத்துப்பற்றியே ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய முனிவனாரும், மரபியல் இருபத்தேழாம் நூற்பாவின்கண் "....ஆறறி வதுவே அவற்றொடு மனனே" என்று ஓதினர். ஆண்டும் 'மனன்' என்பது புத்தியினையே குறிக்கும். மனம் ஏனைச் சிற்றுயிர்க்கும் விளக்கமெய்தும். ஆனால் பகுத்தறிவாகிய புத்தியின் சிறந்த விளக்கம் மக்களுயிர்க்கே உண்டு. கண்காணி: பழஞ்சொல். (அ. சி.) குண விளக்கு - ஆனந்த ஒளி பணம் - படம். கணம் - கூட்டம். (13) 1981. அறிவாய் அறியாமை நீங்கி யவனே பொறிவாய் ஒழிந்தெங்குந் தானான 1போதன் அறிவா யவற்றினுட் டானா யறிவன் செறிவாகி நின்றஅச் சீவனு 2மாமே. (ப. இ.) முழுமுதற் சிவபெருமான் இயல்பாகத் தானே விளங்கும் பேரறிவாகவுள்ளவன். இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய
1. கேட்டாரும். 8. சுட்டறுத்தல், 28. 2. நிர்க்குணனாய். சிவஞானபோதம், 9. 2 - 1.
|