784
 

(ப. இ.) செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு ஆகிய அறிதற்கருவிக்கு நிலைக்களமாகிய பொறிகள் ஐந்து; அவை ஈண்டுப் புலமென ஓதப்பெற்றன. அவற்றினிடமாக நின்று புலன்களை ஏற்றுக் கொள்ளும் இந்திரியங்களாகிய புலன்கொளி ஐந்து. அவையும் செவி மெய் நோக்கு நாக்கு மூக்கென நவிலப்படும். அவை ஈண்டுப் புள்ளென்று உருவகிக்கப்பட்டன. அப் புட்கள் சென்று நுகர்வதாகிய மேயப்படும் புலம் ஐந்து. அவை ஈண்டு நிலமென உருவகிக்கப்பட்டன. அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்பன. அவற்றிற்குரிய பண்புகளும் ஐந்து. அவை கேட்டல், உறுதல், காண்டல், சுவைத்தல், முகர்தல் என்பன. இவையே நீர் எனக் குறிக்கப்பட்டன. இப் பயன்களை அப் புட்கள் நுகரும். அதுவே அப் புட்கள் சென்று மேயும் தொழில்களுமாகும். அத் தொழில்களே ஈண்டு நீர்மை எனக் குறிக்கப்பெற்றன. இவ் வைந்தும் தொழிலால் வேறுபடினும் அறிவிலுறும் பயனால் ஒன்றுபடுதலின் குலம் ஒன்றேயாம். மேய்க்குங் கோலாகிய அறிவினைக்கொண்டு மேய்ப்போனாகிய ஆருயிர் உடம்புகள்தோறும் தனித்தனி ஒன்றேயாம். மிகவும் அலைவுற்றுப் போகும் வழி ஒன்பது என்க. அவ்வொன்பதும் உடலகத்துக் காணப்படும் தொளைகள். அவற்றுள் இரண்டு வாயில்கள் எனவும் ஏழு சாலேகம் எனவும் கூறப்படும். வாயில்கள் இரண்டும் முறையே உணவு உட்புகும் வழியும் சக்கை வெளிக்கழியும் வழியும் என்க. சாலேகம் ஏழும் முறையே காதிரண்டு, கண்ணிரண்டு, மூக்கிரண்டு. கருவாய் ஒன்று என்பன. சாலகம்: சாலேகம்; சாளரம்; சன்னல். மேய்ப்பானைப் பேருயிராகிய சிவனெனக் கொள்ளின் மாடு மேய்ப்பவன் போன்று மேய்த்தற்றொழில் ஒன்று மட்டும் அவன்பாலுளதாகும். அம் மாட்டின் பயனைத் துய்ப்பார் அம் மாட்டுக்கு உரியவராதல்போன்று பொறிகளின் பயனைத் துய்ப்பார் அப் பொறிகளைச் சுமந்து நிற்கும் ஆருயிர்கள் என்க. மேலதனை வரும் வெண்பாவால் நினைவுகூர்க.

"பொறியே புலனாம்புள் ளிந்திரியம் புள்மேய்
நெறியே சுவைநிலனாம் நீர்தான் - அறியின்
நிலப்பண்பாம் புட்டொழிலும் நீர்மையாம் ஐந்தும்
புலம்புள்நிலம் நீர்நீர்மை போற்று."

(அ. சி.) புள் - ஆன்மா. நிலம் - சுவை முதலிய ஐந்து. நீர்மை - இந்திரிய வியாபகம். மேய்ப்பான் - சிவன். வழிஒன்பது - நவத்துவாரம்.

(3)

1988. அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சா திறைவனை எய்தலு மாமே.

(ப. இ.) உடம்பாய தத்துவக் காட்டகத்துப் புள்ளியாகிய இந்திரியங்கள் அரிமாவாக உருவகிக்கப்பட்டன. அவை அக் காட்டகத்து வாழ்கின்றன. அவையும் ஐந்தே. அவ் வைந்தும் புறமே சென்று புறப் பொருள்களை நுகர்ந்து பின்பு அகம் வந்து சேரும். அவ் வரிமாவாகிய ஐந்து சிங்கத்தின் கூரிய நகத்தினையும் பல்லினையும் திருவருளால் அறப்போமானால் உறுதியாய்ச் சிவபெருமான் திருவடியிணையை எய்துதல் கூடும். இருள்முனைப்பால் இயற்றப்படும் நல்வினைக்குக்