833
 

எட்டாம் தந்திரம்(சுப்பிராகமம்)1.உடலிற் பஞ்சபேதம்

2083.காயப்பை யொன்று சரக்குப் 1பலவுளமாயப்பை யொன்றுண்டு மற்றுமோர் பையுண்டுகாயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.

(ப. இ.) உடம்பாகிய மெய்ப்பையினுள் உயிர் கலந்துநிற்கின்றது. அக் காயப்பை ஒன்று. அதன்கண் ஊன்முதலாகிய சரக்குகள் பலவுள்ளன. இதனை மாயையின் காரியம் என்ற பொருளில் மாயப்பை என்றும், நிலையாமை உடையது என்னும் பொருளில் மாயப்பை என்றும் கூறுப. மற்றுமோர் பை என்பது இவ்வுடம்பினகத்து உள்ளம் முதலியவற்றைக் கருவியாகக்கொண்டு ஓர்த்துணரும் ஆருயிரும் ஒன்றுண்டு. அவ்வுயிரை உடலாகக்கொண்டு அவ்வுயிர்க்கும் தோன்றாதவாறு கள்வன்போல் மறைந்துநின்று இயைந்தியக்கும் பேருயிராகிய சிவபெருமானும் ஒருவன் உளன். அச் சிவபெருமான் தனக்கு உடலாகிய உயிரொடும் இவ் வுடலினின்றும் புறப்பட்டால் இம் மாயப்பை மண்ணொடு மண்ணாய்க் கலந்து அழிந்தொழியும். சரக்கு என்பதற்குச் சினம் முதலிய சரக்குகள் என்பதும் ஒன்று. ஓர் பை என்பது ஓர்த்தல் என்னும் பொருளுடைய ஓர்பு என்னும் சொல் ஐகாரச்சாரியைபெற்று ஓர்பை என்று நின்றது.

(அ. சி.) காயப்பை - தேகம். சரக்கு - ஊன் முதலிய பொருள்கள். மாயப்பை - உடம்பு. ஓர்பை - ஓரும் உள்ளம். கள்வன் உள்ளத்தினுள்ளே ஒளித்தருளும் ஒருவன், உயிருடன் இணைந்த பரமாத்மா.

(1)

2084. அத்தன் அமைத்த உடலிரு கூறினிற்
சுத்தம தாகிய சூக்குமஞ் சொல்லுங்காற்
சத்த பரிச உருவ ரசகந்தம்
புத்திமா னாங்காரம் புரியட்ட 2காயமே.

(ப. இ.) அன்னையோடுகூடிய அத்தனாகிய சிவபெருமான் அமைத்த மாயாகாரிய உடம்பு இருவகைப்படும். ஒன்று அனைத்துயிர்க்கும் கருவின்றியே திருவுள்ளத்தான் பிறப்பித்தளித்த பிறப்புடம்பு. இவ் வுடம்புக்குக் காரணம் மல ஆற்றல் மட்டுமேயாம். அம் மலவாற்றலை அகற்றும் பொருட்டுக் கண் கை முதலிய கருவிகளுடன் கூடியபுறத்


1. மனமெனும். அப்பர், 4. 46 - 2.

" விள்ளத்தான். " 4. 76 - 7.

2. அல்லன்மிக. சிவப்பிரகாசம், பொது - 13.