உயிர்ப்படங்கலாகிய துரியாதீதத்து நிகழும் நிலையில் இன்ப நிலையினை இன்னதன்மைத்தென்று சொல்ல ஒண்ணாதென்க. துரியாதீத நிலை - அப்பால்நிலை. (அ. சி.) நரிகள் பதினாலு - கன்மேந்திரியம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, அந்தக் கரணம் நான்கு பரிய புரவி - வேகமாய்ச் செல்லும் ஓசை முதலிய ஐந்து. துரியம் இறந்த இடம் - துரியாதீதம். (18) 2121. மாறா மலமைந்தான் மன்னு மவத்தையின் வேறாய மாயா தநுகர ணாதிக்கிங்கு ஈறாக தேஎவ் வுயிரும் பிறந்திறந்து ஆறாத வல்வினை யாலடி யுண்ணுமே. (ப. இ.) ஆருயிர்கள் திருவடிப்பேறு எய்துங்காறும் விட்டு நீங்காது ஒட்டிநிற்கும் மலம் ஐந்தும் மாறாமலம் எனப்பட்டன. இவை ஆருயிர்களின் ஐம்பாட்டினும் உடன்நிற்கும். இவை நீங்காமையால் மாயாகாரியமாகிய உடல் கலன் முதலியவற்றை இன்னும் வேறாகப் பெறுதல் வேண்டும். ஆகையால் உடம்பின் ஈறு எய்துவதற்கில்லை. அதனால் எத்தகைய வுயிரும் பிறந்து இறந்து ஆறாத வல்வினையால் அடியுண்டு துன்புறும். ஆறாத - துய்த்துக் கழியாத அடியுண்ணும் - துன்புறும். ஆராத என்பது ஆறாத என எதுகை நோக்கித் திரிந்தது. (அ. சி.) மாறாமலமைந்தான் - ஐந்து மலங்களும் நீங்காதவன். (19) 2122. உண்ணுந்தன் னூடாடா தூட்டிடு மாயையும் அண்ணல் அருள்பெற்ற முத்திய தாவது நண்ண லிலாவுயிர் ஞானத்தி னாற்பிறந் தெண்ணுறு ஞானத்தின் நேர்முத்தி 1எய்துமே. (ப. இ.) நுகர்விக்கப்படவேண்டிய மாயாகாரியங்கள் திருவருள் எய்துங்காறும் ஊட்டாது கழியா. சிவபெருமான் திருவருள் பெறுவது வீடுபேறாகும். மாயையை நண்ணுதலில்லாத உயிர்கள் பிறப்பு எய்தினும் அப் பிறப்பு திருவடியுணர்வாகிய சிவஞானப் பிறப்பாகும். அப் பிறப்பின்கண் எண்ணத்தக்க திருவடியுணர்வால் நேர்முத்தியாகிய மீளாஆளாம் திருவடிப்பேறு எய்தும். (அ. சி.) உண்ணுந் தன்னூடு - இருவினைகளால் எற்றுண்ணும் உயிர். (20) 2123. அதிமூட நித்திரை யாணவ நந்த அதனா லுணர்வோ னருங்கன்ம முன்னித் திதமான கேவல மித்திறஞ் சென்று பரமாகா வையவத் தைப்படு வானே. (ப. இ.) ஆருயிர்க்கு - ஆணவமிகுதலால் அதிமூடமாகிய உறக்க முண்டாகும். அதனால் அவ் வுயிர் இருவினைக்கு ஈடான கன்மங்களையே
1. தானமியா. சிவஞானசித்தியார், 8. 2 - 15.
|