869
 

2158. மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட் டதுவுந்தா னன்றாகிச்
சேயகே வலவிந் துடன்செல்லச் சென்றக்கால்
ஆய தனுவின் பயனில்லை யாகுமே.

(ப. இ.) பேருறக்கநிலையாகிய துரியத்தில் ஆளுடன் மட்டும் ஆருயிர்நிற்கும். அதற்கப்பால் அந்நிலையையும் கடந்து அப்பால் நிலையாகிய புலம்பின்கண் மாயையுடன் செல்லும். அவ்வாறு நிற்கும் நிலையில் மாயாகாரிய உடம்பு இருந்தும் வினைநிகழ்ச்சி இன்மையால் ஏதும் பயன் இல்லை. ஈண்டுக் கூறப்படும் 'ஆள்' பொதுமை நிலையென்க.

(அ. சி.) புருடன் - ஆன்மா. கேவல விந்து - கேவலாவத்தையில் மாயையோடு.

(12)

2159. அதீதத் துரியத் தறிவனாம் ஆன்மா
அதீதத் துரிய மதனாற் புரிந்தால்
அதீதத் தெழுந்தறி வாகிய மானன்
முதிய அனலிற் றுரியத்து முற்றே.

(ப. இ.) அப்பால்நிலைப் பேருறக்கத்தின்கண் ஆருயிர் கருவிகளுடன் கூடாமல் தன்னளவாய் அறிவாய்நிற்கும். அந் நிலையிலேயே திருவருள் துணையால் உறுதியாக நின்றால் அப்பால் நிலையில் கிளர்ந்தெழுந்த அறிவாகிய ஆருயிர் முதிய அனல் என்று சொல்லப்படும் சிவபெருமானாகிய பேரறிவுச் சுடரில் புணர்ந்து நிலையுறும். அதீதத் துரியம் : அப்பால் நிலைப்பேருறக்கம்.

(அ. சி.) மானன் - ஆன்மா. முதியவனல் - பழமையான சிவாக்கினி.

(13)

2160. ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரங்
கைகண்ட ஐயைந்திற் கண்டங் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்
மெய்கண் டவனுந்தி மேவல் 1இருவரே.

(ப. இ.) ஆருயிர்கள் ஒவ்வொருநாளும் எய்தும்நிலை ஐம்பாடு என்ப. அவற்றுள் நனவுநிலை புருவநடுவின்கண் ஆகும். அந்நிலையில் தொழிற்படும் கருவிகள் முப்பத்தைந்து. கனவுநிலை கழுத்தின் கண்ணாகும். இங்குத் தொழிற்படுங் கருவிகள் இருபத்தைந்து. உறக்கநிலை நெஞ்சத்தின் கண்ணாகும். இங்குத் தொழிற்படுங் கருவிகள் மூன்று. பேருறக்கநிலை கொப்பூழின்கண் ஆகும். இங்குத் தொழிற்படுங் கருவிகள் இரண்டு. (உயிர்ப்படங்குநிலை மூலத்தின் கண்ணாகும். இங்குத் தொழிற்படுங் கருவி ஒன்று.) கருவிகள் : பொறிபத்து, புலன்பத்து, வளிபத்து, கலன் நான்கு ஆள் ஒன்று ஆக முப்பத்தைந்து. புலன்பத்து, வளிபத்து, கலன் நான்கு, ஆள் ஒன்று ஆக இருபத்தைந்து. உயிர்ப்பு, எண்ணம்,


1. ஒன்றணையா. சிவஞானபோதம், 4. 3 - 1.

" சாக்கிர. சிவஞானசித்தியார், 4. 3 - 1.

" சாக்கிரமா. சுழுத்திஇத. தாயுமானவர், ஆசை 25 - 26.