900
 

(ப. இ.) தூவாமாயை செவிலித்தாயாகவும், தூமாயை நற்றாயாகவும் கொண்டு ஈன்றிட்ட மகவு உடலாகும். தந்தையாவான் சிவபெருமான். அவன் திருவுள்ளத் திருக்குறிப்பால் மாயாகாரியவுடல் வெளிப்படுகின்றது. அம் முறையால் அவனைத் தந்தை என்கின்றனர். இந்த நிலையில் புலம்பிற்கிடந்த புல்லுயிர் உடம்பினைப் பெற்றுப் புணர்வு நிலையினை எய்துகின்றது. புணர்வுநிலையின்கண் செல்லுயிராய் ஒழுகித் திருவருளால் புரிவுநிலையினை அடைகின்றது. புரிவு நிலையினை அடைந்து நல்லுயிராகும். புலம்பு - கேவலம். புணர்வு - சகலம். புரிவு - சுத்தம்.

(அ. சி.) மாமாயை - சுத்த மாயை. மாயை - அசுத்த மாயை.

(43)

பராவத்தை

2230. அஞ்சுங் கடந்த அனாதி பரந்தெய்வ
நெஞ்சம தாய நிமலன் 1பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.

(ப. இ.) உய்வகைக்குத் தடையாம் ஐவகைப் பாசங்களினின்றும் இயல்பாகவே நீங்கியவன் சிவபெருமான். அவன் முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருளாவன். இதுவே அனாதி என்னும் சொற்குப்பொருள். விழுத்தகைப் பெரும்பொளும் அவனே. அவன் நன்றுநினைப்பார் உள்ளந்தோறும் கள்ளமின்றி நின்று நிலவும் தூயோன், என்றும் பிறவா இயல்பினன். மாயாகாரியமாக வியத்தகுமுறையில் படைத்தளித்த இவ் வுடலினின்றும் செவ்விநோக்கி ஆருயிரைப் பிரித்தருள்வன். அதன் பொருட்டு அவன் மாயையுடனும் கலந்துநிற்கின்ற திறத்தை அவனருளால் அறிந்தேன்.

(அ. சி.) அஞ்சும் - ஐந்து மலங்களும். வஞ்சத்து - மாயையின்கண். உடல் உயிர் வேறுபடுத்திட - தேக வாஞ்சையை ஒழித்திட.

(1)

2231. சத்தி பராபரஞ் சாந்தி தனிலான
சத்தி பரானந்தந் தன்னிற் சுடர்விந்து
சத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன்
சத்தி பெறுமுயிர் தானங்கத் 2தாறுமே.

(ப. இ.) சாந்தி என்று சொல்லப்படுவது வேண்டுதல் வேண்டாமையில்லாத விழுமியநிலை. இதனை உவர்ப்பென்பர் உயர்ந்தோர்., இது பேரறிவுப் பெரும்பொருளின் திருவருளாற்றல் ஆகும். அவ் வாற்றலே பேரின்பமாகும். இவ் வருளின் பெருநிலையால், விந்து என்று சொல்லப்படும் தூமாயையின் கண்ணும் உடம்பும் உடம்பின் கூறுகளும் உண்டு. வனப்பாற்றல், நடப்பாற்றல், அன்பாற்றல், அறிவாற்றல், ஆற்றலாற்றல் என ஐவகைப்படும். இவ் வைவகைப் பிரிவும் அருட்பெரும் திருவின்


1. பிறப்போ. அப்பர், 6 - 30 - 5.

" வைச்ச. அப்பர், 4. 80 - 4.

2. சத்திதன். சிவஞானசித்தியார், 1. 3 - 7.