938
 

ஒழிந்த பதினாறும், காப்பு ஒன்றுமாகத் திருப்பாட்டு முப்பதாகும். இவற்றை முறையே நாள் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக ஒருதிங்களுக்கும், நாழிகை ஒன்றுக்கு ஒவ்வொன்றாகத் தனித்தனிப் பகல் இரவுகட்கும் ஓதியுய்யத் திருவுள்ளங் கொண்டமை உய்த்துணர்வார்க்கு நன்கு புலனாகும். இதனை வருமாறு நினைவுகூர்க. நாழிகையே நாள்வழிபாடுகள் நாம் செய்துய்ய, வாழிமுப்பதப்பரருள் வாழ்த்து. இத் திருப்பாட்டின்கண் முதற்சீர் நான்கின்மட்டும் ஒவ்வோர் எழுத்துக்கள் குறைந்துள்ளன. அதற்குக் காரணம் திருக்குறுந்தொகை பதினொரு எழுத்துக்களானமைந்த வரியேயாம் என்க. திருமந்திரம் பன்னிரண்டெழுத்துக்கள் அமைந்தது. மேலும் வெண்டளை பிழையாதன.

(அ. சி.) தன்னினில் - தன் உடலில். தன்னை - ஆன்மாவை.

(46)

2311. அறியகி லேனென் றரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
இருசுட ராகி இயற்றவல் லானும்
ஒருசுட ராவந்தென் உள்ளத்துள் ளாமே.

(ப. இ.) மேலோதியவாறு திருவருளால் யான் அறியகில்லேன் என்று நீயும் கவன்று அரற்றுதல் செய்யவேண்டா. நன்னெறிநான்மை வழியே சென்றால் திருவருளால் சிவன் உனக்கும் நேர்படுவன். அவன் பின்பு அடியேனுக்கும் ஆருயிர் பேருயிர் என்ற இருசுடராய் இயைந்து இயக்கும் உண்மையினையும் புலப்படுத்துவன். அத்தகைய வல்லானாகிய சிவன் அடியேனை அவன் திருவடிக்கீழ் அடக்கி அடியேன் உள்ளத்துள்ளாவன். ஆருயிர் - ஆன்மா. பேருயிர் - பரமான்மா; சிவன்.

(அ. சி.) இருசுடர் - சிவன், சீவன். ஒருசுடர் - சிவன்.

(4)

2312. ஓம்புகின் றானுல கேழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூறுவர்
தேம்புகின் றார்சிவஞ் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலு மாமே.

(ப. இ.) சிவபெருமான் உயிர்க்கு உயிராய், உலகுக்கும் உயிராய் உள்நின்று உலகு ஏழினையும் ஒம்பியருள்கின்றனன். அச் சிவபெருமான் திருவடிக்கண் ஒருங்கிய மனத்தார் கூம்புகின்றாராவர். அத்தகையாரை மெய்யடியார் எட்டுவான்குணத்து எம்மான் எனக் கூறுவர். சிவபெருமானின் திருவடியிணையினை நினையாதவர் தேம்புகின்றாராவர். உள்ளத்தளர்ச்சியில்லாதவர் இடையறாது நினனத்து சிவன் திருவடியைக் கொள்ளத் தளரார்.

(அ. சி.) கூம்புகின்றார் - மனங்குவிந்தவர். கூம்பகில்லார் - தளர்ச்சி அடையாதவர்.

(48)

2313. குறியறி யார்கள் குறிகாண மாட்டார்
குறியறி யார்கடங் கூடல் பெரிது
குறியறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாவிருந் தன்னமு மாமே.