2321. அறிவறி வென்றங் கரற்றும் உலகம் அறிவறி யாமை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை யழகிய 1வாறே. (ப. இ.) உலகோர் திருவருள் நாட்டமின்றி அறிவு அறிவென்று அரற்றுவர். எது அறிவு எது அறியாமை என மெய்ம்மையினைப் பகுத்து உணரார். திருவருளால் உணரும் உயிர், அறிவு, அறியாமை என்னும் இரண்டினையும் அருளால் கடந்து முற்றறிவுபெற்றுச் சிவமாம் பெருவாழ்வு எய்தும். அங்ஙனம் எய்தினால் அவ் வறிவறியாமை கடந்து சிவமாம் பெருவாழ்வு எய்திய அடைதற்கரிய திருவாம் பேரழகு புலனாம் என்க. (7) 2322. அறிவறி யாமையை நீவி யவனே பொறிவா 2யொழிந்தெங்குந் தானான போது அறிவா யவற்றினுள் தானா யறிவின் செறிவாகி நின்றவன் சீவனு மாமே. (ப. இ.) மாயாகாரியக் கருவிகளைக்கொண்டு அறியும் அறிவு சுட்டறிவு. அறிந்ததைக் குறித்தலும் அறிந்தேன் என்றலும் சிற்றறிவு. இவ் விரண்டும் புல்லறிவு. இருட்சார்பால் ஏதும் அறியாநிலைமை அறியாமை இது பேதைமை. எனவே பேதைமையும் புல்லறிவாண்மையும் ஆகிய அறியாமை அறிவென்னும் இரண்டினையும் கடந்து நீங்கினவன் மேலோனாவன். அவனே பொறிவழிச்செல்லா நெறிநிற்பவன். பொறிவழி நீங்கினவன் சிவனருளால் எங்குந் தானாக விளங்குவன். தானானபோது நல்லறிவாகிய சிவவுணர்வாய் அவற்றினுள் தான் ஒடுங்கிநிற்பவன் ஆதலின் அறிவின் செறிவாகி நின்றவன் ஆவன். அவனே உயிர்க்கிழவனாகிய சீவனுமாவன். பேதைமையை அல்லறிவெனவும் கூறுப. அந்தமுறையில் அறியாமை, சிற்றறிவு, முற்றறிவு மூன்றனையும் அல்லோடு புல்நல் அறியாமை சிற்றறிவு, சொல்முற்றறிவெனவாம் தூக்கு எனக்கூறலாம். (அ. சி.) நீவி - ஒழித்து. பொறிவாய் ஒழிந்து - புலன்களைக் கடந்து. (8) 2323. அறிவுடை யார்நெஞ் சகலிட மாவது அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவது அறிவுடை யார்நெஞ்சொ 3டாதி பகவனும் அறிவுடை யார்நெஞ்சத் தங்குநின் றானே. (ப. இ.) திருவருளால் நல்லறிவுடையார் நெஞ்சம் அருள்வெளியாகும். அந் நெஞ்சமே சிவபுண்ணிய அருந்தவ நிலைக்களமாகும். அவ்
1. அறியாமை. சிவஞானசித்தியார், 8. 2 - 20. " வந்தெனுடல். தாயுமானவர், ஆகாரபுவனம் - 18. 2. பொறிவாயில். திருக்குறள், 6. 3. அகரமுதல. " 1.
|