11. பரலட்சணம் 2413. அதீதத்து ளாகி யகன்றவன் நந்தி அதீதத்து ளாகி யறிவிலோன் ஆன்மா மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே. (ப. இ.) அப்பாலாகிய மேல்நிலைக்கண் நந்தி நிறைந்துநின்றனன். ஆணவப் பிணிப்பால் அறிவில்லாத கிடப்புநிலை எய்திய உயிர் திருவருள் நினைவால் உண்மை உணர்வு எய்தும். அக் கிடப்பு நிலையில் அறிவு விளங்காது கிடந்ததும் இப்பொழுது புலனாகும். உண்மை யுணர்வு பெற்றதனால் இருள் அகன்று அவ்வுயிர் தூய்மை எய்தும். அம் மன்னுயிர் தன்னைவிட்டு நீங்காது கலப்பால் ஒன்றாம் நிலையிலுள்ள பதியாகிய சிவபெருமான் திருவடியிற் பதியும். அப்பொழுது அவ்வுயிர் பரவுயிர் அல்லது சிறப்புயிர் எனப் பெயர் பெறும். (அ. சி.) அகன்றவன் - வியாபித்தவன். மதி - ஞானம். இருள் - ஆணவம். (1) 2414. ஆதியும் அந்தமும் இல்லா வரும்பதி சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின் நீதிய தாய்நிற்கும் நீடிய வப்பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் 1தோரன்றே. (ப. இ.) முதலும் முடிவும் இல்லாத அறிதற்கரிய பெரும்பதி சிவபெருமான். அவன் பேரொளிப் பிழம்பாய் உள்ளொளியாய் விளங்கும் ஒள்ளியன். நல்லார்க்குத் தோன்றியும் பொல்லார்க்குத் தோன்றாதும் நிற்கவல்லான். அதனால் அவன் அறமுறை குன்றியவனல்லன். அறமுறை - நீதி. யாண்டும் முறைமையோடே நிற்பன். என்றும் பொன்றாது நிலைப் பாடுடையதாக விருக்கும் சிவஞானபோதவடிவினன். அம்மேலான சிவஞானபோதத்தை அருள்நினைவால் உணர்வோர் திருவருட்புண்ணியச் செல்வராவர். (2) 2415. துரியங் கடந்து துரியா தீதத்தே அரிய வியோகங்கொண் டம்பலத் தாடும் பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே. (ப. இ.) துரியமாகிய பேருறக்கமும் நீங்கித் துரியாதீதமாகிய அப்பால் நிலையை எய்தினர்க்கு ஓர் அரிய ஒழிவு உண்டாகும். அவ்வொழி வினைப்பெற்று ஐவகை (2361) மன்றருங்களுள் வகர அடையாளமாகிய பொன்னம்பலத்தின்கண் ஐந்தொழிலருட்கூத்தை இயற்றுவியாநிற்பன். அவனே பெரிய முதல்வனாவன். மேலும் அவனை ஓங்கார வட்டத்தினுள்ளே
1. ஆதியும். 8. திருவெம்பாவை, 1.
|