989
 

(அ. சி.) முத்துரியம் - சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம் தனதாதி - பராவத்தையில் நனவாதி. ஈடு - வியாபகம்.

(1)

2428. தானா நனவில் துரியந்தன் தொம்பதந்
தானாந் துரிய நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபத மற்ற தருநனா
வானான மேன்மூன்றுந் துரியம் அணுகுமே.

(ப. இ.) ஆருயிர் தானாம் நனவில் பேருறக்கமாகிய துரியத்து நீ என்னும் முன்னிலைப் பொருளாய்த் தொம்பதமாக நிற்கும். ஆருயிரின் பேருறக்கநிலையிற் பேசப்படும் நனவு, கனவு, உறக்கம் என்னும் மூன்றினில் நீங்காத அருட்பாடாம் பராவத்தை முடிந்தவிடமாகும். அதுவே அந்நிலைக்குரிய அரிய நனவாகும். மிக மேலாகச் சொல்லப்படும் சிவதுரியத்து உறக்கம். பேருறக்கம், உயிர்ப்படங்கல் வந்து பொருந்தும் என்க.

(அ. சி.) தானா நனவில் - சீவ அவத்தையாகிய நனவில். பரபதம் அற்றது - பராவத்தையின் முடிந்த இடம். மேன் மூன்றும். சிவாவத்தையில் சுழுத்தியாதி மூன்றும்.

(2)

2429. அணுவின் துரியத்து நான்கும தாகிப்
பணியும் பரதுரி யம்பயி னான்குந்
தணிவிற் பரமாகிச் சார்முத் துரியக்
கணுவிலிந் நான்குங் கலந்தவீ ரைந்தே.

(ப. இ.) அணுவாகிய ஆருயிர்த் துரியத்து நான்கும், பணிசெய்து போற்றும் பரையாகிய திருவருட்பாட்டில் நிகழும் துரியத்து நான்கும், நீங்காத சிவதுரியம் என்று சொல்லப்படும் பரமா அவத்தையில் நிகழும் இரண்டுங்கூட்டி இந்நான்கின் கலப்புஞ்சேரப் பத்தாகும் அவத்தை என்க ஆருயிர்த்துரியத்து நான்காவன: நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் என்பன. இதுபோலவே பராவத்தையில் நான்கும் கூறிக் கண்டுகொள்க. சிவநிலைக்கண் பேருறக்கமும் உயிர்ப் படங்கலும் ஆகிய துரியமும் துரியாதீதமுமாகிய இரண்டு ஆகமொத்தம் பத்து என்க. இவையே கலந்த ஈரைந்தென்க. அவத்தை: நிலை; பாடு.

(அ. சி.) அணுவின் துரியத்து - சீவ துரியத்தில். கணுவில் - சேர்க்கையில். ஈரைந்து - சீவதுரியம் நான்கு + பரதுரியம் நான்கு + பராவத்தையில் துரியம் துரியதாதீதம் இரண்டு ஆகப் பத்து.

(3)

2430. ஈரைந் தவத்தை யிசைமுத் துரியத்துள்
நேரந்த மாக நெறிவழி யேசென்று
பாரந்த மான பராபரத் தைக்கியத்து
ஓரந்த மாமிரு பாதியைச் சேர்த்திடே.

(ப. இ.) ஈரைந்தவத்தையாகிய பத்துப் பாட்டின்கண் பொருந்திய ஆருயிர்த்துரியம், அருட்டுரியம், அருளோனாகிய சிவத்துரியம் என்னும் முப்பாடுகளுள. பாடு - அவத்தை திருவடிப் பேறெய்தும் சிறந்த அந்தமாகிய