100
 

கூற்றுவன் ஓலை தோற்றமுடன் வரும். அவ்வோலை கண்டதும் ஐவரும் ஆருயிராகிய அச் செய்யினைக் காவல் கைவிட்டகல்வர். சோன்று கொண்டாய் - சொந்தமாக்கிக் கொண்டாய்.

(அ. சி.) ஐவர்க்கு - ஐம்பொறிகளுக்கு. ஐவர்க்கு நாயகன் - உருத்திரன்.

(2)

231. மத்தளி ஒன்றுள தாளம்இ ரண்டுள
அத்துள்ளே வாழும் அரசரும்1 அஞ்சுள்ள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்2
மத்தளி3 மண்ணாய் மயங்கிய வாறே.

(ப. இ.) மண் + தளி = மண்டளி. இதுவே மட்டளி எனவும், மத்தளி எனவும் மருவிவரும். எனவே மண்ணாலாகிய நடமாடும் திருக்கோவில் - உடம்பு. அஃது ஈண்டு மத்தளி எனப்பட்டது. மத்தளியாகிய உடம்பு ஒன்று உள்ளது. அதன்கண் உயிர்ப்பினை விடுதலும் நிறுத்தலுமாகிய இடங்கள் இரண்டுள. அவ்வுடம்பினை எனதெனப் பற்றுக்கொண்டு ஆளும் அரசர்களாகிய ஆவிக்கருவிகளும் அங்குள்ளன. தூவாமாயையினின்றும் உணர்வுமெய்யாகத் தோன்றும் காலம், ஊழ், உழைப்பு, உணர்வு, விழைவு ஆகிய ஐம் போர்வையுடன் ஆருயிர் உடம்பகத்து நிற்றலான், ஏற்றுரையாக அரசர் ஐவர் எனக் கூறப்பட்டனர். அவ்வுயிர்களை இயக்கி, என்றும் பிரியாது நின்றருளும் சிவபெருமானாகிய அரசனும் அங்குளன். அவ்வரசன் புறப்பட்டால் அம் மத்தளியாகிய உடம்பு மண்ணொடு கலந்து மண்ணாய்ப் போகும் மாத்தளி என்பது, மத்தளி எனக் குறுகிற்று எனலும் ஒன்று. வாழும் அமைச்சரும் ஐந்துளர் எனவும் பாடம் என்ப. ஒன்றுள என்பது துவ்வீறுதொக்கு நின்றது. தளி - திருக்கோவில்.

(அ. சி.) மத்தளி - உடல். தாளம் - இரேசகம் - பூரகம். அரசன் - உயிர்.

(3)

232. வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

(ப. இ.) வெந்தொழியும் இயல்பு வாய்ந்த உடம்புக்குத் தலைவனாகிய உயிர்க்கு உயிரை, திருவருளால் திருவடியுணர்வு பெறுதலாகிய திருநான்மறை முடிவின்வழி நடப்பிக்கும் வேதாந்தக் கூத்தனை, ஊழிக்காலத்து அனைத்தும் ஒருங்கு வெந்தழியும் அறிவுப் பெரு வெளியாகிய சுடுகாட்டுள் ஆடும் சுடர்க் கொழுந்தாகிய நந்தியை இவ்வுடம்புள்ள போதே நன்குணர்ந்து ஓழுகுதல் தலை. இவ்வுடம்பு எரியுண்டழியும். அதனால் நிலையா உடம்பு நிலைத்துள்ள போதே நந்தியெங் கடவுளை அடையும் வழி வகைகளை அறிந்துணர்தல் வேண்டும். இவ்வுண்மையினை அறிந்து கொள்ளாதவர் தம்முயிர் அவ்வுடம்பினைத் தாங்கி நிற்கும்


1. (பாடம்) அமைச்சரும் ஐந்துளர்.

2. "அரசன் புறப்பட்டான்.

3. அம்மானே. ஆரூரர், 7. 96 - 6.