549
 

4. கடுஞ்சுத்த சைவம்
(மெய்கண்டார் செந்நெறி)

1412. வேடங் கடந்து விகிர்தன்றன் பான்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடுஞ் சிவபோ தகர்சுத்த சைவரே.

(ப. இ.) செந்நெறிக்குக் கூறப்படும் திருக்கோலங்கள் ஏதும் இல்லாமல், கருத்தாலன்றிக் கருவியால் செய்விக்கும் தன்மையில்லாத முழுமுதற் சிவனைப் பொருந்தி ஆரவாரம் இல்லாமல் 'காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றன் நாமங்'களையும் கெடுத்து, துன்பத்தினை விளைவிக்கும் பசைமலமும் தன்முனைப்பும் அற்றொழிய திருவடியுணர்வு வந்து துணையாகும் மெய்யுணர்வினர் சிவபோதகர் எனப்படுவர். இவர்களே உண்மைச் சைவராவர். சாடுதல் - ஒருசார் துணையாதல். பசை மலம் - வாசனாமலம்; நசை.

(அ. சி.) விகிர்தன் - சிவன். ஆசாபாசம் - ஆசை, பாசம். பாடொன்று - துன்பம் பொருந்திய. போதகர். ஞானிகள்.

(1)

1413. உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்தும்
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே.

(ப. இ.) ஐம்பூதங்களாலான யாக்கையும், ஆறுகோடி மாயாசத்திகள் என்று சொல்லப்படும். செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை ஆகிய அறுவகைக் குறறங்களும், ஐவகைப் புலன்களும், இவற்றிற்கு நிலைக்களமான காரணமாயையும், ஒழிக்க வேண்டுவனவாய புலம்பினைச் செய்த பழமலமும் அருளால் துடைத்து உறுதியாகத் தன்னையுணர்ந்து தலைவனை யுறுதல் சித்தாந்த சைவச் செந்நெறிச் சீர்மையாகும். உடலான ஐந்து என்பதற்கு உடலின்கண் காணப்படும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்னும் நிலை ஐந்தும் எனலுமாம். இதுவே மெய்கண்டார் செந்நெறியாகும்.

(அ. சி.) உடலான ஐந்து - உடலின்கண் ஏற்படும் ஐந்து அவத்தைகளும், ஓர் ஆறும் - காமம் முதலிய ஆறும். ஐந்தும் - ஐம்புலன்களும். அடல் - வலிமை. நீவப்படல் - ஒழிக்கத்தக்க. கேவலபாசம் - சகசமலம்; ஆணவம். தனையுறல் - தன்னை அறிதல்.

(2)

1414. சுத்தச் சிவனுறை தானதில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

(ப. இ.) உண்மைச் சிவபெருமான் உரைத்தருளிய தமிழ் ஆகமத்தின்கண் சொல்லப்பெறுகின்ற தூமாயை நிலைக்களங்களாகிய