951
 

(ப. இ.) கருதுவார் கருத்துக்கு ஒவ்வுமாறு பள்ளி வகுப்புப்போல் படிப்படியாக முப்பொருள் உண்மை வகுத்துரைத்தருளினன் அவ் வுரைகள் அரனுரை ஆகமம் என்று பெயர்பெறும் அவ்வாகமத்துள் கூறப்படும் சமய வுண்மைகள் அகச் சமயம், அகப்புறச் சமயம், புறச்சமயம், புறப்புறச் சமயம் என நான்காகவும், ஒவ்வொன்றும் அவ்வாறாக இருபத்துநான்காகவும் பெறப்படும். இவைகளெல்லாம் சமயப்புறம் என்றதனால் பெறப்பட்டன. இவையனைத்தும் மாயை மாமாயை என்னும் மாயாகாரியப் பகுப்பினுள் அடங்குவன ஆகும். இம் முப்பத்தாறு மெய்களுக்கும் அப்பாற்பட்டது வேதாந்தசித்தாந்த மெய்ம்மை என்ப. உருவிய - நீங்கிய.

(16)

2345. வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
1ஈதாம் எனாதுகண் டின்புறு 2வோர்களே.

(ப. இ.) திருவருளால் ஆராயின் வேதாந்தம் என்பது விருப்புடன் கேட்கத்தக்க மூன்று பதங்களையுடையன. அவ்வுயிரினும் சிறந்த பதங்கள் அகரம் உகரம் மகரமாகும். இம் மூன்றும் முறையே அருவும் உருவும் மருவும் அகும். அருவால் சிவபெருமானும், உருவால் சிவபெருமானுக்கு உருவாம் வனப்பாற்றலாகிய அம்மையும், ஆருயிர்களுக்கு உருவைப் படைத்தளித்து நடத்தும் ஆதியும், மருவும் என்றதனால் பண்டே புல்லிய மலநோயும், அம் மலநோயாற் பிணிப்புண்ட ஆருயிர்களும், அப்பிணிப்பினைக் கண்டிரங்கி விடுவிக்கக் கூட்டிய வினைமாயைகளும் பெறப்படும். அகர உகர மகரங்கள் ஓங்காரம் எனப்படும். இம் மூன்றும் அறிவு விளங்குதற்குரிய ஓசைத் துணைக்கருவியாகும். இந்த அறிவின் முடிபாகிய பிரணவம் என்று சொல்லப்படும் ஓங்காரத்தினுட்புகுந்து நாதாந்தம் வேதாந்தம்போதாந்தங்கட்கு முதல்வனாகிய சிவபெருமானை இஃதென்று சுட்டியறியப்படாது ஒட்டியறிந்து ஓவா இன்பம் உறுவார்கள். போதாந்தம் - முடிந்த முடிபாகிய திருவடியுணர்வு.

(அ. சி.) முப்பதம் - அகாரம், உகாரம், மகாரம்.

(17)

2346. வேதாந்தஞ் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேயம்
நாதாந்தம் ஆனந்தஞ் சீரோ தயமாகும்.
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.

(.ப. இ.) வேதாந்த சித்தாந்த முப்பொருள் முடிபுகள் வேற்றுமையில்லாத ஒற்றுமையுள்ள அடையாளக் குறிப்பாகும். அறிவின் முடிவே அருள் ஞானம். செறிவின் முடிவாகிய யோகாந்தம் பொதுவாக அறியப்படும் பொருளாகிய ஞேயம் ஆகும். ஓசைமுடிவாகிய நாதாந்தம் இன்பமாகும். அம்மட்டோ அவ்வின்பவடிவாய்த் திகழ்ந்து இன்பத்தைத் தந்தருளும் சீர்த்தோற்றமுமாகும். முடிந்த முடிவாகிய திருவடிப்


(பாடம்) 1. ஈதாந்தம்

2. நிர்க்குணனாய். சிவஞானபோதம், 9. 2 - 1.