986
 

இவற்றொடு விரவி விந்து எனப்படும் ஒளிவடிவாய் நின்றுகாத்தளிக்கும் அவ்வருள் அறிவாற்றலாகிய பரையாகும். அப் பரை, பேரறிவாகிய சிவனிடத்து அடங்கிவிளங்கும். ஆருயிர்கள் உய்தற்பொருட்டு எண்ணி அமைத்துள்ளன நன்னெறி நான்மையாகும். அவை முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனப்படும். இவற்றால் திருவடியுணர்வு கைகூடும். அதன்பொருட்டு ஒளியுணர்வாகிய விந்து ஞானம் மேலெழுந்து விளங்கும். கருவியொடு கூடாவழிச் சீல முதலிய ஏதும் ஆருயிர்க்கு விளங்கா அவற்றை விளக்குவித்தற்பொருட்டுத் திருவருள் தம் விழைவால் திருத்தொழில் ஐந்தும் உள்ளிட்டு ஆவியின்கண் புரிவதே அம்மையின் அருளாகும். ஆணு - ஆருயிர்.

(அ. சி.) பாலிய - ஆன்மாக்களைக் காத்தற்பொருட்டு. கோலிய-சூழ்ந்த. அணுச்செய்தி - ஆண்மாக்களுக்காகச் செய்யும் ஐந்தொழில்.

(9)

2422. வேறா மதன்தன்மை போலுமிக் காயத்தில்
ஆறாம் உபாதி யனைத்தாகுந் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் 1பிரகாசமாய்
ஊறா யுயிர்த்துண் டுறங்கிடு மாயையே.

(ப. இ.) ஆருயிர் உடலொடுங்குங் காலத்தும் உடல் தொடங்குங் காலத்தும் வேறாயிருக்கும். அதுபோல் உடலுடன் கூடியுள்ள காலத்தும் அதன் தன்மை வேறாயிருத்தல்வேண்டும். உடலகத்து ஆறுநிலைகள் உண்டு. இவற்றை ஆறாதாரம் என்ப. இவையும் வருத்தந் தருவனவேயாகும். இவைபோல் ஏனைத் தத்துவக் கூட்டங்களும் வருத்தந் தருவனவேயாகும். திருவடிப்பேறாகிய அறிவுப் பேரொளி தூண்டும் சுடரொளியாகக் காணலாம். இத் திருவொளி தோன்றுதலும் ஒன்றின் பாகுபாடாகிய இருவேறு மாயையும் ஊறாவுயிர்த்தலாகிய பெருமூச்சு விட்டுச் செயலற்று உறங்கிக் கிடக்கும். ஊறா - ஊறி; பெருகி: செய்யா என்னும் வாய்பாட்டு வினைஎச்சம்.

(அ. சி.) ஆறாம் உபாதி - ஆறு ஆதனங்களின் அனுபவம். ஊறாய் - குற்றமுடையதாய், உயிர்த்துண்டு-பெருமூச்சுவிட்டு.

(10)

2423. தற்பர மன்னுந் தனிமுதற் பேரொளி
சிற்பரந் தானே செகமுண்ணும் போதமுந்
தொற்பதந் தீர்பாழிற் சுந்தரச் சோதிபுக்கு
அப்புற மற்றதிங் கொப்பில்லை 2தானன்றே.

(ப. இ.) தானே முழுமுதலாய் நிலைபெற்றிருக்கும் தனி முதற் பேரொளி சிவபெருமானாவன். அவனே இயற்கைப் பேரறிவும் பெரும் பொருளுமாவன். அவன் திருவருளால் ஆருயிர்கள் உலகவுண்மையினை அறிந்து அகலும். அதற்குத் துணையாகநிற்கும். அறிவுக்கு அறிவாம் பேரறிவாக நிற்பதும் அப் பெரும் பொருளே. தலைவனைக் கண்டு கைக்கொண்டவிடத்து தன் நாமங்கெடுதல் தலைவிக்கு இயல்பாகும். அது,


1. மூவகை. சிவஞானசித்தியார், 1. 1 - 26.

2. நிர்க்குண. சிவஞானபோதம், 9. 2 - 1.