130
 

டாவதில்லை. அவர்கட்கு இன்ப வடிவினன் ஆன சிவன் கற்பசு - கல்லாலாகிய பசுப் போன்று காட்சியளிப்பன். கற்பசு பெயரும், உருவும், மடியும், பிறவும், பொலிவும் பசுப் போன்று தோற்றமளிக்கும். தோற்றத்தளவானும் கூடப் பாலுக்கு வாயில் ஏதும் இல்லை. அதுபோல் சிவனால் அடையப் பெறும் இன்பப் பயன் கழிய நின்றார்க்கு ஏதும் இல்லை. கற்பசு - கல்லா. மடி - பாற்காம்பு.

(அ. சி.) புராணன் - அநாதியாயுள்ளவன். கற்பசு - கல்லாலே செதுக்கப்பட்ட பசுவைப் போல.

(9)

296. வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வாது
அச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந் தார்க்கே நாணுகலு மாமே.

(ப. இ.) ஓருடம்பிருவராகி என்றதனால் ஒருபால் பெண்ணும் ஒரு பால் ஆணும் ஆக ஒன்றோடொன்று ஒவ்வாத் திருக்கோலத் திருவுருவுடையவன் சிவன். அவனைத் திருவருளால் உள்ளத்தின்கண் வைத்துத் திருவடியுணர்வான் உணர்ந்து மனமார நினைத்து வாயாரப் புகழ்ந்து நன்னெறிக்கண் ஒழுகுவார்தம்மை அவனும் உடன் ஒத்து உணர்வன். அச்சாகிய உடம்பு தளர்ந்து உழன்ற காலத்து அதனை உரனுடன் நிறுத்தும் அச்சாணியாகிய மனம் திண்மை அழிந்து கலங்கும். அங்ஙனம் கலங்கிய இடத்தும் அந்தம் ஆதியாகிய சிவபெருமானை உள்ளன்புடன் உணர்க. அங்ஙனம் உணர்ந்தார்க்கு அவன் மிக நெருங்கி அஞ்சேலென்று அருள் செய்வன். நச்சுதல் - விரும்புதல். ஒன்றொடொன் றொவ்வாக்கோலம் என்பதற்கு வாழ்வுதரும் போகவடிவமும், தாழ்வுதரும் கோர வடிவமும், தவம் தரும் யோகவடிவமும் எனக் கூறுதலும் ஒன்று. அவ்வுண்மை வரும் திருப்பாட்டான் உணர்க:

ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு
நின்றலால் உலக நீங்கி நின்றன னென்றும் ஓரார்
அன்றியவ் வேட மெல்லா மருள்புரி தொழிலென் றோரார்
கொன்றது வினையைக் கொன்று நின்றவக் குணமென் றோரார்.

- சிவஞானசித்தியார், 1 . 2 - 23.

(அ. சி.) அச்சு - தேகம். நச்சு - விருப்பம். ஆணி - மன உறுதி.

(10)