776
 

பலவுமாம் உண்மை உணர்க. அவ் வுயிராகிய அன்னத்திற்குத் தான் சிவபெருமானைவிட்டு நீங்கிநிற்கும் தனிமுதற்பொருள் என்று எண்ணுங்காறும் அச் சிவபெருமானை எய்தும்பேறு கிட்டாதென்க. தன்னிலை யன்னந்தனியொன்று என்றது ஒப்பில்லாத சிவபெருமான் தனி நிலைப்பட்டதொன்றாவன். அறியாமை வயப்பட்ட ஆருயிர் மடவன்னம் என ஓதப்பெற்றது. ஈன்றாளும் கைம்மகவும்போல் தனித்திராமை துணைப் பிரியாமை.

(அ. சி.) ஆற்றங்கரை - உலக வாழ்வு. அன்னம் இரண்டு - சிவன், சீவன். துணைப்பிரியா - இரண்டும் தனித்து இரா. தன்மை - தன்னிலை. அன்னம் தனி ஒன்று - விகாரப்பாடில்லாத - ஒப்பற்ற பரமான்மா. பின்னது - இன்னொன்று. மடவன்னம் - அறியாமை நிறைந்துள்ள சீவான்மா. பேறணுகாது - தான் வேறு என்று எண்ணிக்கொண்டு இருக்கும் அளவும் முத்தி அடையாது.

(2)

புருடன்

1970. வைகரி யாதியு மாயா மலாதியும்
பொய்கரி யான 1புருடாதி பேதமும்
மெய்கரி ஞானங் கிரியா 2விசேடத்துச்
செய்கரி யீசன் அனாதியே 3செய்ததே.

(ப. இ.) ஆருயிர்கள் மலப்பிணிப்பினின்றும் நீங்கிச் சிவபெருமான் திருவடியின்பமாகிய நலப்பிணிப்புற்று வாழ்தற்பொருட்டு உள்ளதாகிய மாயையினின்றுந் தொன்மையிலேயே நால்வகை ஓசைகளையும், ஐவகை மலங்களையும், எழுவகை உணர்வுமெய்களையும், தோற்றுவித்து மெய்ப்பொருளாய்ச் சான்றாய் என்றும் நின்று விளக்கும் சிவபெருமான் பேரறிவுப் பெரும் பொருளாவன். அவன் தனது பேராற்றற் பெருந்திருவால் இவ்வனைத்தையும் ஆக்கி அருள்கின்றனன். அம் முறையாற் சிவபெருமான் இவையனைத்தும் தொழிற்படுத்தும் சான்றாவன் என்க. வைகரியாதி நான்கும்: செவியோசை, மிடற்றோசை, நினைவோசை, நுண்ணோசை என்ப. ஆணவம், கன்மம், மாயை, மாயைஆக்கம், மறைப்பாற்றல் என்பன ஐவகை மலங்களாகும். எழுவகை உணர்வுமெய்: மருள், காலம், ஊழ், உழைப்பு, உணர்வு, விழைவு, ஆள் என்பன.

(அ. சி.) வைகரியாதி - வைகரி முதலிய ஐந்து வாக்குகள். மாயா மலாதி - மாயை முதல் ஐந்து மலங்கள். புருடாதி - புருடன் முதலிய ஏழு தத்துவங்கள். மெய்கரி - பிறப்பை ஒழித்து நிற்கும். கரி ஈசன் - சாட்சியான சிவன்.

(3)

1971. அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே.


1. மாயையிற், நியதிபின், விச்சையி. சிவஞானசித்தியார், 2. 3: 4 - 6.

2. ஒன்றதா. " 1. 3 : 5.

3. சிவனரு. " 1. 3 - 12.