983
 

ஆராய்ந்தறியவல்லார்க்க எவ்வகைக் குற்றமும் இல்லை. ஓங்கார (2271) வட்டத்தினுள் ஒலி, ஒளி, அ, உ, ம் என்னும் ஐந்தெழுத்தும் காணப்படும். இவை முறையே ஒருபுடையொப்பாகச் 'சிவயநம' என்னும் ஐந்தெழுத்தையும் பொருளையும் ஓதுவனவாகும். ஆதலால் இவற்றை ஆராய்வார் திருவைந்தெழுத்தை ஆராய்வார் பெறும்பயனைப் பெறுவர் ஆகவே துரிசிலாராவர். துரியவல்லார் - துருவவல்லார். துருவ என்பது துரிய என நின்றது.

(அ. சி.) வியோகம் - ஒழிவு. பிரணவக்கூபம் - ஓங்கார வட்டத்துள். துரிய - ஆராய்ந்து அறிய.

(3)

2416. செம்மைமுன் னிற்பச் சுவேதந் திரிவபோல்
1அம்மெய்ப் பரத்தோ டணுவனுள் ளாயிடப்
பொய்ம்மைச் சகமுண்ட போத வெறும்பாழிற்
செம்மைச் சிவமேரு சேர்கொடி 2யாகுமே.

(ப. இ.) செந்தமிழ் மூதாதையராகிய சித்தர்கள் குழூஉக் குறியாகக் கந்தகத்தைச் செம்மையென்றும், இரசத்தை வெள்ளை யென்றும் வழங்குவது மரபு. செம்மையின் முன்னிலையில் வெண்மை மாறுதல் எய்துவதுபோல் அம்மைக்குரிய முழுமுதற் சிவத்துடன் அணுவனாகிய ஆருயிர் பிரிவின்றிக் கலப்புறும். அப் பரம் அழகிய அழிவில்லாத பெரும்பொருளாதலின் அம்மெய்ப்பரம் என ஒதினர். நிலை பேறில்லாத சுட்டியுணரப்பட்ட உலகியல் நுகர்வுணர்வு அடங்கிவிடும். கலப்பில்லாத தூய இயற்கை அறிவொளிப் பெருவெளி வெறும்பாழ் எனப்படும். அப் பாழின்கண் செம்மைச் சிவமாம் பொருளில் பொன்மலை வெளிப்பட்டு விளங்கும். அம் மலையுடன் ஆருயிர்கள் தம்மை மறந்து மெய்ம்மைக் கலப்புற்று இரண்டறநின்று திரண்ட பேரின்பநுகர்வுச் சிறப்புறும். இதற்கு ஒப்பு பொன்மலையைச் சேர்ந்த காகம் பொன்வண்ணமாய் மன்னுவதாகும். கொடி - காகம்.(அ. சி.) செம்மை - கந்தகம். சுவேதம் - பாதரசம். அணுவன் - ஆன்மா. போதவெறும் பாழ் - சுத்த ஞான ஒளி. மேரு சேர் கொடி - மேருவைச் சேர்ந்த காக்கைபோன்ற தன்மை. இது 'மேருவைச்சேர்ந்த காகமும் பொன்னாம்' என்னும் பழமொழியை அடியாகக் கொண்டது.

(4)

2417 .வைச்ச கலாதி வருதத்து வங்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவ மாமுண்மை யொன்றவே
அச்சம் அறுத்தென்னை யாண்டனன் 3நந்தியே.


(பாடம்) 1. அம்மைப்.

2. பொன்வண்ண. 11. சேரமான், 1.

" சுருக்கமில். யாப்பருங்கலக்காரிகை, 3.

" திருநின்ற. 7. 39 - 4.

3. அடல்வேண்டும். திருக்குறள், 343.

" வைச்ச. அப்பர், 4. 80 - 4.

" விச்சைதான். 8. திருச்சதகம், 29.