256
 

ாகும் அச் சுடர் உச்சித்துளைவழிச் செல்லும். மேலும் அச் சுடர் கொப்பூழுக்குக்கீழ் நான்குவிரல் எல்லையிலும் பரவியிருக்கும். அது பற்றியே மெய்கண்ட நாயனாரும் 'அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்தோமம்' என்றருளினர.் யோனி - குறியிடம். செஞ்சுடர் - உச்சித் துளைவழி (பிரமரந்திரமார்க்கம்)

(அ. சி.) பாலித்த - பிறப்பைத் தருகின்ற. கோலித்த - வட்டமாயுள்ள.

(3)

562. நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே1

(ப. இ.) மூக்கின்கீழ்ப் பன்னிரண்டுவிரல் அளவில் எல்லையிற் காணப்படும் இடம் நெஞ்சகமாகும். அவ்விடத்துச் சிவபெருமானை இவர்தந்தூரும் இறையென முறையுற நாடிக் கொல்லாமை முதலிய எண்பூக்கொண்டு திருவைந்தெழுத்தால் விழுமிய வழிபாடு ஆற்றுதல் வேண்டும். ஆற்றின் மாசித்தி மாயோகம் வந்துகைகூடும். மா - நனி மிகு பெருமை. இவ் வழிபாடுடையார்தம் உடம்பினுக்கு எந்நாளும் எவ்வகையூறும் உண்டாகாதென்க. 'செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற்கலை தெரிந்தவரோ, டந்தமில் குணத்தவர்க ளர்ச்சனைகள் செய்யு' முறைமையினை நம் மெய்கண்டநாயனார் அருளுமுறை வருமாறு:

"அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டரனை
அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில்-அஞ்செழுத்தால்
குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில்
அண்டனாஞ் சேடனாம் அங்கு."

- சிவஞானபோதம், 9: 3 - 1.

'கொல்லாமை ஐந்தடக்கல் கொள்பொறுமை யோடிரக்கம், நல்லறிவு மெய்தவம் அன்பெட்டு'ம் ஞானமலராகும். பன்னிரண்டங்குலம் - பன்னிரண்டங்குல இடமாகிய நெஞ்சு (அநாகதம்). (இந்த நெஞ்சிடமே அகவழிபாட்டிற்குரியது. அகவழிபாடு - மானத பூசை.)

(அ. சி.) அதோமுகம் - கீழ்.

(4)

563. சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே.

(ப. இ.) அகத்தே பிறைக்கீற்றுப்போலும் சுடரொளி தோன்றும். தோன்றினால் அதுவே குற்றமற்ற நற்றவப் பேரின்பமாகும். அதனைத் திருவருள் நினைவால் குறிக்கொண்டு ஒழுகுங்கள். ஒழுகவே மிடறாகிய விசுத்தியினிடத்து நிலவொளி தோன்றும். அந் நிலவொளி தோன்றி


1. மானமா சம்பந்தர், 3. 24 - 7.