33
 

அப்பொறிகள் தன்வழி மீளாத இடத்து அருள் துணையால் வாட்டி நல்வழிப்படுத்துதல் வேண்டும். கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டுள்ள உடம்பும் அவ்வுடம்பகத்து வினைக்கீடாகப் பொருந்திப் பிறந்து இறந்து உழலும் உயிரும் வெவ்வேறென்று கருதாது ஒன்றென்றே கருதிய மருளுணர்வு நீங்கப்பெற்று வெவ்வேறென்னும் உண்மை தோன்றிக் கட்டறுத்து நின்ற நிலையில் சிவ வடிவாகுவர்.

(அ. சி.) இந்தியம் ஈட்டி - புலன்களை அடக்கி. பெத்தமறுத்தல் - பாசம் நீங்குதல்.

(4)

79. வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே.

(ப. இ.) முப்பொருள் நாட்டும் தமிழ்மறை முடிவாம் வேதாந்தங் கேட்க அயற்புல மாந்தராம் வேதியர் விரும்பினர். வேதாந்தத்தைக் கேட்டும் நெடுநாள் நிலையாகச் செய்துவரும் கொலைபுலை வேள்வியினை விட்டொழியார். உண்மை வேதாந்தமென்பது தன்னைச் சிவனுக்கு அடிமையெனக் கொண்டு அவன் அருள்வழி நிற்பதே வேட்கையாய்த் தனக்கென ஒரு சிறிதும் எவ்வகை வேட்கையும் இலனாயிருத்தல். வேட்கை அகன்ற இடமே வேதாந்தங் கேட்டுப் பயனடைதற்குரிய நயன்சேர் தகுதியிடமாகும். அந் நிலையில் வேதாந்தம் கேட்டவர் வேட்கைவிட்ட சிவநாட்டமுற்ற விழுமியோராவர். கொலைபுலை வேள்வியால் எய்தும் பயன் நிலையிலாச் சிறுபயனும் பாவவாயிலுமாகும்.

(அ. சி.) வேதாந்தம் - வேதத்தின் முடிவு.

(5)

80. நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ1
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

(ப. இ.) பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் ஆதலின் சிறப்பாகிய பெயர் பெறுவது தூய அகம்புற வொழுக்கத்தினாலேயாம். புறவடையாளங்கள் அகவொழுக்கத்தைக் காட்டும் அறிகுறியேயாம். அகவொழுக்கமில்லாமல் புறவொழுக்கமாகிய அடையாளம் மட்டும் கொள்வது தன்னையும் பிறரையும் வஞ்சிக்கும் பாவச் செயலேயாம். அம்முறையில் பேர்கொண்ட பார்ப்பார் பூணூலும் உச்சிக் குடுமியும் விடாது பற்றிக் கொண்டு தம்மைப் பார்ப்பார் என்பர். இவை பிரமத்தன்மையுணர்த்தும் உண்மையாகா. அக் குறிப்பே நுவலிற் பிரமமோ வென்பது. நூலென்பது கயிறு. சிகை என்பது மயிர்முடி. இவற்றின் அக அடையாளமாக நீங்கா உயிர் ஒழுக்கமாகவுள்ளன முறையே மறை முடிவும், அம் முடிபால் பெறப்படும் முப்பொருள் உண்மைத் திருவடியுணர்வுமேயாம். தெய்வ அருள் நூலுடை அந்தணரைக் காணின்,


1. கோலும். அப்பர், 50 - 40 - 8.